குரு அதிசார பெயர்ச்சி 2026: கடக ராசியில் இருக்கும் குரு பகவான் அங்கிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியாகும் காலகட்டத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் சிம்ம ராசிக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியானது 12 ராசிகளில் சில ராசிக்கு அற்புதமான பலன்களையும், ஒரு சில ராசிக்கு அசுப பலன்களையும் கொடுக்கப் போகிறார். தனுசு, கும்பம், விருச்சிகம், சிம்மம் ஆகிய 4 ராசியினருக்கு பிரம்மாண்ட மாற்றம், முன்னேற்படும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.
விருச்சிக ராசியினருக்கு கண்டிப்பாக மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கும். விருச்சிக ராசியினருக்கு என்ன விதமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போகிறார் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். விருச்சிக ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். வேலையில் மிகுந்த கவனம் தேவை. 10 ஆம் இடத்தில் குரு இருப்பதால் வேலை, தொழில் மாறும். நன்றாக இருக்கும் வேலையைக் கூட சாதாரண காரணத்தைக் கூறி வேலையை விடுவதற்கான சூழல் உள்ளது. தொழில் தொடங்குவதற்கான அமைப்பு உள்ளது. நிறைய பேருக்கு வேலை இழப்பு, வேலை மாற்றம், டிரான்ஸ்பர் போன்றவை உண்டாகும். கெமிக்கல் டிரேடிங், பெர்டிசைட் டிரேடிங் போன்ற டிரேடிங் தொடர்பான தொழிலைத் தொடங்குவீர்கள். 100 சதவீதம் தொழிலில் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில், சுக ஸ்தானத்தில், புரொடக்ஷன், பார்ட்னர் ஆகியவற்றில் குரு பார்வை இருப்பதால் பண வரவு ஏற்படுவதற்கான யோகம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நன்றாக யோசித்து செய்யும் தொழிலில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். கர்ம ஸ்தானத்துக்கு குரு கேது வருவதால் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தொடை சம்பந்தப்பட்ட பகுதிகளில், இடுப்புக்கு கீழ், முட்டிங்காலுக்கு கீழ் தோல் தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பொருளாதாரம் அற்புதமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். குடும்பம் சார்ந்த விஷயங்கள் நன்றாக இருக்கும். 6 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் சண்டைகள் ஏற்பட்டாலும் செட்டில்மென்ட் கிடைக்கும் அமைப்பு உள்ளது. பிரிந்தவர்கள் சேரும் யோகம் ஏற்படும். வேலையில் மிகுந்த கவனம் தேவை. மேலதிகாரிளுக்கு ஆலோசனை கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு மிகப்பெரிய யோகத்தைத் தரும். ஞாயிற்றுக்கிழமை தோறும் தரிசனம் செய்வது நல்லது. பணம் சேரும் அமை்ப்பு உள்ளது. திருமணம் தள்ளிப்போகும். புதிய தொழில் தொடங்கும் அமைப்பு உள்ளது. வீடு வாங்கும் யோகமும், சொத்துக்கள் சேரும் யோகமும் உள்ளது. சொந்த ஊரிலேயே முன்னேறும் அமைப்பு உள்ளது. குழந்தை பாக்கியம் தள்ளிப்போகும்.விருச்சிகம் ராசி பலன்
தொழிலில் ஜாக்பாட்
ஆரோக்கியம்
முயற்சிகளில் வெற்றி
வழிபாடு