Guru Peyarchi: தனுசு ராசியினரே தயாராகுங்கள்! குரு தரப்போகும் அபார யோகங்கள்


  • Guru Peyarchi 2026: 2026 குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி மே 26 ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி ஜூன் 2 ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.

    Advertisement

    குருவின் இந்த பெயர்ச்சியால் தனுசு ராசியினருக்கு தொழில், பணவரவு, சமூக மதிப்பு, குடும்ப நலன் மற்றும் புதிய வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறக்கூடும். என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.

    தனுசு

    தனுசு ராசியினர் குருவுடைய ராசி. குரு பகவான் 7 ஆம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்திற்குச் சென்று உச்சம் பெறுகிறார். உங்கள் ராசி உச்சம் பெறுவதால் நிறைய நன்மைகள், சுப காரியங்கள் நடக்கம். நிறைய சுப விரயங்கள் நடக்கும் நல்ல காலகட்டம். வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பெரிய அனுகூலங்கள் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நிறைய நன்மைகள் நடக்கும்.

    Advertisement

    கோபம் வேண்டாம்

    ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. ரத்த அழுத்தம், சர்க்கரை, படபடப்பு போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகள், கணவர், வேலையாட்களிடம் கத்துவதை தவிர்ப்பது நல்லது. எப்போதும் கோப உணர்வுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

    பழனி முருகர் தரிசனம்

    குரு 2, 12, 4 ஆம் இடத்தைப் பார்ப்பதால் ரத்தபந்த உறவுகளுக்கு நிறைய உதவிகளைச் செய்வீர்கள். பழனி முருகரை தரிசனம் செய்வது ஏற்றத்தைத் தரும். சிரசு விபூதியை தினந்தோறும் பயன்படுத்துவது நன்மை பயக்கும். அர்த்தாஷ்டம சனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். பெருமாள் பாடல்களை கேட்பது, வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

    Advertisement

    தடைகள் விலகும்

    முக்கியமான மாற்றங்களையும், முன்னேற்ற வாய்ப்புகளையும் வழங்கப் போகிறார். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த தடைகள் படிப்படியாக விலகும். புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு, வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் தொழில் விரிவாக்கம் போன்ற சாதகமான பலன்கள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியங்களில் வெற்றி கிடைத்து தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    சேமிப்பு உயரும்

    பொருளாதார ரீதியாக வருமானம் உயர்ந்து, சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை நிலவும். திருமண முயற்சிகள் சாதகமாக அமையலாம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குருவின் அருளால் மதிப்பு, மரியாதை மற்றும் சமூக அந்தஸ்து உயரும். இருப்பினும் செலவுகளில் கவனம் செலுத்தி, ஆன்மிக வழிபாடுகளை மேற்கொள்வது மேலும் நல்ல பலன்களைத் தரும்.

    English Summary

    Guru Peyarchi 2026 brings significant career growth, financial gains, and new opportunities for Sagittarius (Dhanusu) natives. Jupiter’s transit supports success, recognition, and overall prosperity.