2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்!


  • Guru Peyarchi 2026: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறும் இந்த காலகட்டத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 2026 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். கடகம் என்பது சந்திரனின் வீடு. சந்திரனின் வீட்டில் குரு உச்சம் பெறுகிறார்.

    Advertisement

    குருவுக்கு ஸ்தான பலத்தைவிட பார்வை பலம் மிகுந்த விசேஷமானது. விருச்சிகம், மகரம், மீன ராசியை பார்க்கும் குரு பகவானால் கடக ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது, வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

    கடகம் ராசி பலன்

    கடக ராசியினருக்கு உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் குரு பகவான் வருகிறார். டாப் கிளாஸ் யோகம் உண்டாகும். அனைத்து விதமான சுப காரியங்களும் உங்கள் வீட்டில் நடக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் ஏற்படும். மற்றவர்களின் தேவையில்லாத நடவடிக்கைகளால் வருத்தப்படுவதற்கான சூழல் உள்ளது.

    Advertisement

    குரு அருள்

    மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஆரோக்கியம், உடனிருப்பவர்கள் செய்யக்கூடிய விஷயத்தில் அதீத கவனம் தேவை. ஆலங்குடி குரு ஸ்தலம் செல்வது விசேஷமான பலனைத் தரும். குரு ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். புதிய அறிமுகத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொழிலதிபர்கள், தலைவர்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.

    கவனம்

    உங்களை சுற்றி எல்லா விஷயங்களையும் சிலர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது வெளியில் செல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நம்பிக்கை பாத்திரமானவர்களை துரோகத்தால் வெளியில் பார்ப்பார்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். டிசம்பத்தில் ஜென்மத்தில் கேது, 7 ஆம் இடத்தில் ராகு வருவதால் கோளார் பதிகத்தை தினந்தோறும் சொல்வது பாதுகாப்பு அரணாக இருக்கும்.

    Advertisement

    ஏற்றம்

    பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையேயான பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நீதிமன்றம், வழக்கு வரை சென்ற கணவன், மனைவி பிரச்சனைகள் தீர்ந்து அந்நியோன்யம் அதிகரிக்கும் நல்ல காலகட்டம். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் அமைப்பு உள்ளது.

    முடிவுகளில் வெற்றி

    தைரியமாக எல்லா முடிவுகளையும் எடுத்து செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். மாற்றம், முன்னேற்றம் தரக்கூடிய அருமையான காலகட்டம்.

    English Summary

    Guru Peyarchi: The 2026 Guru Peyarchi is expected to bring positive changes for Kadagam Rasi natives, especially in career, finances, and personal growth. This Jupiter transit may open new opportunities, improve confidence, and support long-term success in both professional and family life.