Guru Peyarchi 2026: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறும் இந்த காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 2026 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். கடகம் என்பது சந்திரனின் வீடு. சந்திரனின் வீட்டில் குரு உச்சம் பெறுகிறார்.
குருவுக்கு ஸ்தான பலத்தைவிட பார்வை பலம் மிகுந்த விசேஷமானது. விருச்சிகம், மகரம், மீன ராசியை பார்க்கும் குரு பகவானால் கன்னி ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது, வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். கன்னி ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் பெறக்கூடிய காலகட்டம். 11 ஆம் இடத்திற்கு குரு பகவான் வருவதால இழந்த விஷயங்கள் அனைத்தும் படிப்படியாக மீண்டும் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். விமோர்சனம் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். திருவனந்தபுரத்தில் இருக்கக்கூடிய அனந்தபத்மநாபர் கோயிலில் சுவாமி வழிபாடு செய்வது முன்னேற்றத்தைக் கொடுக்கும். பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். அவர்களுடைய உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பில் ஒன்றன்பின் ஒன்றாக முன்னேற்றம் ஏற்படும். தைரியமாக முன்னெடுத்து செல்லக்கூடிய காலகட்டம். யோக பலத்தை அதிகளவில் பெற்றுத் தரும். திருமணத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் இருக்கும் அந்நியோன்ய குறைபாடுகள் நீங்கும். கணவராக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடமும் அந்நியோன்யம் அதிகரிக்கக்கூடிய அற்புதமான காலகட்டம். லாபத்தின் அளவு அபரிமிதமானதாக இருக்கும். முதலீடுகள் விஷயத்தில் நிபுணர்கள், குடும்பத்தினர், நண்பரகளிடம் கலந்தாலோசிக்கமால் செய்வது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுபகாரியங்கள் அதிகமாக நடக்கக்கூடிய ராசி. குரு பகவானின் அருளால் தொழில், வியாபாரம், பணவரவு போன்ற விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வாய்ப்பு, பதவி உயர்வு அல்லது புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு அதிகம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்பு உள்ளது. மனதில் இருந்த குழப்பங்கள் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரித்து கோவில் தரிசனம், வழிபாடுகளில் ஆர்வம் உருவாகும். இருப்பினும் செலவுகளை கவனமாக கட்டுப்படுத்துவது நல்லது. உடல்நலத்தில் சிறிய கவனக்குறைவு கூட பிரச்சனைகளை தரக்கூடும். மொத்தத்தில், இந்த குருப்பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும் நல்ல முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக அமையும். 7 இல் சனி இருந்தாலும் திருமணத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். அலர்ஜி, ஒவ்வாமை, விட்டமின், கால்சியம் குறைபாடுகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.கன்னி ராசி பலன்
முதலீடுகளில் கவனம்
பணவரவு
நம்பிக்கை