Guru Peyarchi 2026: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயரச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறும் இந்த காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 2026 ஆம் ஆண்டின் குருப்பெயரச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். கடகம் என்பது சந்திரனின் வீடு. சந்திரனின் வீட்டில் குரு உச்சம் பெறுகிறார்.
குருவுக்கு ஸ்தான பலத்தைவிட பார்வை பலம் மிகுந்த விசேஷமானது. விருச்சிகம், மகரம், மீன ராசியை பார்க்கும் குரு பகவானால் மேஷ ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது, வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். மேஷ ராசியினருக்கு 3 ஆம் இடத்தில் இருந்த குரு பகவான் 4 ஆம் இடத்துக்கு வருகிறார். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபவிரயங்கள் செய்வீர்கள். நல்ல அனுகூலங்கள் காணப்படும். மருத்துவமனை ஆரம்பிப்பது, அறக்கட்டளை ஆரம்பிப்பது, கோசாலை தொடங்குவது, பசு மாடுகள் வாங்குவது, இயற்கை விவசாயம் செய்வது, விவசாய இடங்கள் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். அம்மன், ஆஞ்சநேயர், விநாயகர் கோயில்களுக்கு திருப்பணிகள் செய்வீர்கள். சந்தோஷமான நிலைமைகள் ஏற்படும்ய மன வருத்தங்கள் நீங்கும். புதிய புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் மீது அன்போடும், அரவணைப்போடும் நண்பர்கள் இருப்பார்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு, ஆதரவு கிடைக்கும். மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். கடல் கடந்து நல்ல பயணங்களை மேற்கொள்வீர்கள். கடல் கடந்து வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற நல்ல அமைப்பு உள்ளது. பழைய வண்டிகளை வைத்திருக்கும் மேஷ ராசியினர் புதிய வண்டிகளை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். எல்லா விஷயங்களும் ஏற்றத்தை ஏற்படுத்தும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி எல்லா விஷயங்களும் உங்களுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும். ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், ரத்தத்தில் பரவும் தொற்று நோய் பாதிப்புகளில் கவனமாக இருப்பது நல்லது. ஹீமோகுளோபின் பரிசோதனை செய்து கொள்வது நன்மை பயக்கும். மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வழிபாடு செய்வது, மகான்கள் வழிபாடு செய்வது அற்புதமான அனுகூலத்தைத் .மேஷம் ராசி பலன்
ஆதரவு
வீடு, நிலம் யோகம்
வழிபாடு