ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம்


  • Guru Peyarchi 2026: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறும் இந்த காலகட்டத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 2026 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். கடகம் என்பது சந்திரனின் வீடு. சந்திரனின் வீட்டில் குரு உச்சம் பெறுகிறார்.

    Advertisement

    குருவுக்கு ஸ்தான பலத்தைவிட பார்வை பலம் மிகுந்த விசேஷமானது. விருச்சிகம், மகரம், மீன ராசியை பார்க்கும் குரு பகவானால் ரிஷப ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது, வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷப ராசியினருக்கு 2 ஆம் இடத்தில் இருந்த குரு பகவான் 3 ஆம் இடத்திற்குப் போகிறார். மூன்று நரசிம்மர்களான கடலூரில் உள்ள சிங்கர்குடி, விழுப்புரத்தில் உள்ள பூவரசன்குப்பம், உளுந்தூர்பேட்டையில் உள்ள பரிக்கல் நரசிம்மரை ஒரே நாளில் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அடிவயிறு, முதுகு தண்டுவம் தொடர்பான பாதிப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    Advertisement

    தடை நீங்கும்

    திருமணத் தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், கணவன் மனைவிக்கிடையேயான சண்டை போன்றவை நீங்கும். பிரிந்திருந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரக்கூடிய பாக்கியம் ஏற்படும். பெற்றோர்களுக்குத் தேவையானவற்றை, உறவினர்களுக்குத் தேவையானதை செய்வீர்கள். மன தைரியத்துடன் இருக்க வேண்டிய காலகட்டம். சஞ்சலங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது.

    அனுகூலம்

    திருமணத்தில் பாதிப்பாகி மறுமணத்திற்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு மறுமண அமைப்பு ஏற்படும். லாபம் ஏற்படும். அனுகூலங்கள் காணப்படும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய காலகட்டம். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைக்காத அளவுக்கு பெரிய சந்தோஷம், அனுகூலம் ஏற்படும்.

    ஜெயம்

    இழுபறியாக இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும். ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். காலகட்டம். வியாபாரத்தில் இருந்த கஷ்டங்கள் தீரும். அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். பதட்டங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம்.

    English Summary

    Guru Peyarchi: The 2026 Guru Peyarchi is expected to bring positive changes for Rishabam Rasi natives, especially in career, finances, and personal growth. This Jupiter transit may open new opportunities, improve confidence, and support long-term success in both professional and family life.