2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி


  • Guru Peyarchi 2026: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறும் இந்த காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 2026 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். கடகம் என்பது சந்திரனின் வீடு. சந்திரனின் வீட்டில் குரு உச்சம் பெறுகிறார்.

    Advertisement

    குருவுக்கு ஸ்தான பலத்தைவிட பார்வை பலம் மிகுந்த விசேஷமானது. விருச்சிகம், மகரம், மீன ராசியை பார்க்கும் குரு பகவானால் துலாம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது, வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு 9 ஆம் இடத்தில் இருந்த குரு 10 ஆம் இடத்திற்கு வருவதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். பட்டீஸ்வரம் துர்க்கையை வழிபாடு செய்வது அனுகூலத்தை ஏற்படுத்தும். சனியின் ஆதிக்கம் இருப்பதால் மற்றவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் எந்த மாற்றங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது.

    Advertisement

    ஏற்றம்

    துணை விஷயத்தில் சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். குடும்பத்தாருடன் உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அற்புதமான காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது ஏற்றத்தைத் தரும். தொலைதூரத்தில் இருந்தாலும் பெற்றோரிடம் பேசுவது, அவர்களுக்குத் தேவையான விஷயங்களை செய்து கொடுக்க வேண்டும்.

    வேலையில் கவனம்

    உறவுகளுக்கும், உங்களுக்கும் இருந்த பாகப் பிரிவினை, சொத்து பிரிவினை பிரச்சனைகள் சரியாகக்கூடிய நல்ல காலகட்டம். உத்தியோகத்தில் அதீத கவனமாக இருப்பது நல்லது. அவசரப்பட்டு வேலையை விட்டு விடாமல் இருக்க வேண்டும். உத்தியோகமும், படிப்பும் கிடைக்கும் வரை இருக்கும் வேலையையும், படிப்பையும் விட்டு விடாமல் இருப்பது நல்லது.

    Advertisement

    புதிய வாய்ப்பு

    குரு பகவானின் அருளால் தொழில், வியாபாரம் மற்றும் பணவரவு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் மெதுவாக நிறைவேற ஆரம்பிக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்து சமூகத்தில் மதிப்பும் உயரும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் அல்லது புதிய தொழில் முயற்சிகள் சாதகமாக அமையலாம்.

    வழிபாடு

    குடும்ப வாழ்க்கையில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். மனதில் இருந்த பயம், குழப்பம் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரித்து கோவில் தரிசனம், வழிபாடு போன்றவற்றில் ஆர்வம் உருவாகும். இருப்பினும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மொத்தத்தில், இந்த குருப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய முன்னேற்றங்களையும் நல்ல மாற்றங்களையும் தரக்கூடியதாக அமையும்.

    English Summary

    Guru Peyarchi: The 2026 Guru Peyarchi is expected to bring positive changes for Thulam Rasi natives, especially in career, finances, and personal growth. This Jupiter transit may open new opportunities, improve confidence, and support long-term success in both professional and family life.