2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்!


  • Guru Peyarchi 2026: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறும் இந்த காலகட்டத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 2026 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். கடகம் என்பது சந்திரனின் வீடு. சந்திரனின் வீட்டில் குரு உச்சம் பெறுகிறார்.

    Advertisement

    குருவுக்கு ஸ்தான பலத்தைவிட பார்வை பலம் மிகுந்த விசேஷமானது. விருச்சிகம், மகரம், மீன ராசியை பார்க்கும் குரு பகவானால் விருச்சிக ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது, வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

    விருச்சிக ராசி பலன்

    விருச்சிக ராசியினருக்கு எல்லா விதத்திலும் அனுகூலங்களும், சந்தோஷம் காணப்படும். அஷ்டமத்தில் இருக்கும் குரு 9 ஆம் இடத்திற்கு வருகிறார். 9 ஆம் இடமென்பது பெரிய விசேஷமாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதாவது 12 ஆண்டுகளுக்குப் பிறகு விருச்சிகத்திற்கு 9 ஆம் இடத்தில் குரு பகவான் வந்திருக்கிறார். 2 ஆம் அதிபதியும், 5 ஆம் அதிபதியும் 5 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பூர்வ புண்ணியத்தில் இருந்த தோஷங்கள் நிவர்த்தியாகும்.

    Advertisement

    குரு பார்வை

    திங்கள்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு கொடுப்பது மேன்மையைத் தரும். பெற்றோர், பெரியவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 5 ஆம் பார்வையாக குரு ராசியைப் பார்ப்பதால் சகலவிதத்தில் நன்மைகள், சந்தோஷங்கள், அனுகூலங்கள், ஏற்றங்கள் கிடைக்கும். எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்படும். வீட்டில் அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    நல்ல செய்தி

    இழந்தவற்றை எல்லாம் பிடிக்கும் காலம். குடும்பத்தில் புதிய உறவுகள் வருவார்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் கஷ்டங்கள் தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். திருமணத் தடை, குழந்தை பாக்கியத் தடை அனைத்து விதமான தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். நீண்ட நாள் கஷ்டங்கள் தீரும்.

    Advertisement

    வழிபாடு

    தொழிலில் இருந்த சிக்கல்கள், தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். தாய், தந்தையின் உடல்நிலை, வயதில் பெரியவர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு சிறந்த பரிகாரமாக இருக்கும். திருநள்ளாறு சென்று வழிபாடு செய்து வருவது 5 ஆம் இடத்தில் இருக்கும் சனியின் பாதிப்புகளை குறைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த மன சஞ்சலங்கள் தீரும்.

    English Summary

    Guru Peyarchi: The 2026 Guru Peyarchi is expected to bring positive changes for Viruchigam Rasi natives, especially in career, finances, and personal growth. This Jupiter transit may open new opportunities, improve confidence, and support long-term success in both professional and family life.