குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் உச்சம் பெறும் குரு பகவான்.. 3 ராசிகளுக்கு யோக பலன்!


  • குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் உச்சம் பெறும் குரு பகவான் விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகங்களை அள்ளித் தரப்போகிறது. பலன்கள், பரிகாரங்கள் வழிபாடு முறைகள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2ஆம் தேதி நடைபெறவுள்ள குருப்பெயர்ச்சியில், குரு பகவான் மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி செய்யும் வீடு என்பதால் இங்கு குரு உச்ச நிலையை அடைகிறார். உச்சம் பெற்ற குருவின் பலம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

    Advertisement

    குருவின் பார்வை பலம் மிக முக்கியமானதாகும். இந்த பெயர்ச்சியில் குரு பகவான் தனது விசேஷ பார்வைகளால் விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளை நோக்குகிறார். இதனால் இந்த மூன்று ராசிகளுக்கும் மிகுந்த யோக பலன்கள் கிடைக்கவுள்ளது.

    குருவின் பார்வை சிறப்பு

    5ஆம் பார்வையாக விருச்சிக ராசியை பார்க்கிறார். 7ஆம் (சமசப்த) பார்வையாக மகர ராசியை பார்க்கிறார். 9ஆம் பார்வையாக மீன ராசியை பார்க்கிறார். இதன் காரணமாக இந்த மூன்று ராசிகளும் குருவின் அருளால் சிறப்பான உயர்வை பெறுகின்றன.

    விருச்சிக ராசி பலன்கள்

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பகவான் மிக முக்கியமான யோகத்தை தருகிறார். நீண்ட காலத்திற்கு பிறகு குருவின் நல்ல பார்வை கிடைப்பதால் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி மற்றும் புதிய உறவுகள் உருவாகும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் சரியாகும். மன அழுத்தம் குறைந்து தைரியம் அதிகரிக்கும்
    பெற்றோர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களில் புதிய நபர்களிடம் எச்சரிக்கை அவசியம். தேவையற்ற சண்டைகளை தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் இது முன்னேற்றம் நிறைந்த நல்ல காலமாக இருக்கும்.

    Advertisement

    மகர ராசி பலன்கள்

    மகர ராசிக்காரர்களுக்கு குரு 7ஆம் இடத்தில் அமர்வதால் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். அதே சமயம் ராகு-கேது நிலை காரணமாக சில கவனமும் தேவைப்படுகிறது. தொழில், வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்லிணக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நரம்பு, இரத்த அழுத்தம் போன்றவற்றில் கவனம் தேவை. வாகனம் ஓட்டுவதில் எச்சரிக்கை அவசியம். தேவையற்ற குடும்ப தலையீடுகளை தவிர்க்க வேண்டும். பயணங்களில் மிகுந்த கவனம் தேவை. ஒட்டுமொத்தமாக முன்னேற்றம் கிடைத்தாலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம்.

    Advertisement

    மீன ராசி பலன்கள்

    மீன ராசிக்காரர்களுக்கு இது மிகச் சிறப்பான காலமாக அமைகிறது. ராசியாதிபதி குரு பகவான் உச்ச நிலை பெற்று ராசியை பார்ப்பதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வேலை வாழ்க்கையில் உயர்வு உண்டாகும். திருமண யோகம் மற்றும் சுப நிகழ்வுகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். புதிய வாய்ப்புகள் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி ஏற்படும். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. வயிறு தொடர்பான ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகளின் நட்பு மற்றும் பழக்கங்களில் கவனமாக இருப்பது நல்லது

    English Summary

    Guru peyarchi 2026: Guru transits into Kadagam on June 2, 2026, where it becomes exalted and gains strong positive power.This transit brings special benefits to Scorpio, Capricorn, and Pisces through Jupiter’s powerful aspects. Overall, it is considered a highly auspicious period bringing growth, success, and new opportunities.