அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. லாபத்தில் குரு.. கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்


  • Guru Peyarchi 2026: 2026 குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி மே 26 ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி ஜூன் 2 ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. குருவின் இந்த பெயர்ச்சியால் கன்னி ராசியினருக்கு ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன. என்ன பலன்கள் எல்லாம் கிடைக்கப் போகிறது என விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    கன்னி

    கன்னி ராசியினருக்கு 10 இல் இருந்த குரு 11 ஆம் இடத்துக்கு லாப ஸ்தானத்துக்கு வருகிறார். அங்கிருந்து 7, 5, 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் இதுவரை இருந்து வந்த மன வருத்தங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். நம்பிக்கை ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். துணை விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

    யோக பலம்

    யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். முதலீடுகள் செய்யத் தொடங்குவீர்கள். வீடு கட்டும்போது, தொழில் செய்யும்போது சிறிது சிறிதாக பணத்தை வெளியிடுவது நல்லது. இல்லையெனில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. டாக்குமென்டேஷன்களை சரியாக செய்து கொள்ள வேண்டும். கையெழுத்து போடும் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. இல்லையெனில் தேவையில்லாத அவமானம், சிக்கல்களில் சிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

    Advertisement

    ஆரோக்கியம்

    அலர்ஜி, சளி தொந்தரவு, விட்டமின் குறைபாடு, ஹார்மோன் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வார்த்தைகளில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பேச்சை கேட்பது ஏற்றத்தைத் தரும். துணை விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். விவாகரத்து, இரண்டாம் திருமணம் போன்றவற்றில் அனுகூலம் ஏற்படும். ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

    ஜெயம்

    தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள், சிக்கல்கள், கஷ்டங்கள் நிவர்த்தியாகும். அடுத்தடுத்து நன்மைகள் கிடைக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொட்டது துலங்கும் நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

    Advertisement

    வழிபாடு

    பிள்ளைகள், துணைகளால் அதிர்ஷடமும், அனுகூலமும் காணப்படும். தூக்கமின்மை நீங்கி, இனி நிம்மதியாக தூங்கக்கூடிய அற்புதமான காலகட்டம். எதிர்பாராத நன்மைகள் நடக்கக்கூடிய அமைப்பு உள்ளது. பள்ளிகொண்ட பெருமாள் வழிபாடு, திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபத்மநாபர் கோயிலில் வழிபாடு செய்வது சிக்கல்களை நிவர்த்தி செய்யும். விஷ்ணு காயத்ரி சொல்வது சகலவித நன்மைகளையும் ஏற்படுத்தும்.

    English Summary

    Guru Peyarchi 2026: Guru Peyarchi 2026 brings powerful positive changes for Virgo (Kanni) natives. Career growth, financial stability, family happiness, and unexpected opportunities are likely as Jupiter's favorable transit supports progress and prosperity.