Guru Peyarchi 2026: 2026 குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி மே 26 ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி ஜூன் 2 ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.
குருவின் இந்த பெயர்ச்சியால் கும்பம் ராசியினருக்கு தொழில், பணவரவு, சமூக மதிப்பு, குடும்ப நலன் மற்றும் புதிய வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறக்கூடும். என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம். கும்பம் ராசியினருக்கு 6 இல் குரு பகவான் உச்சம் பெறுகிறார். 2 ஆம் அதிபதியும், 11 ஆம் அதிபதியும் 6 ஆம் இடத்தைப் பார்ப்பதால் கை வரை வந்த வாய்ப்புகள் தடைபடும் அமைப்பு ஏற்படும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கழிவுப் பாதை, அடிவயிறு, முதுகு தண்டுவடம், வயிற்றில் உள்ள உறுப்புகள், முகத்தில் உள்ள உறுப்புகளில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். வலுக்கலான இடங்களில் பார்த்து செல்ல வேண்டும். நினைத்தவை கைகொடுக்கக் கூடிய யோகம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கெளரவம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பணிச்சுமை மற்றும் தடைகள் குறைந்து, புதிய வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சி, புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் வருமான உயர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, வருமானம் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகம் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். யோக பலன்கள் அதிகளவில் உண்டாகும் காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் நல்லவை ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த நீண்ட பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தொற்றுநோய் பாதிப்புகள் திடீரென அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது உரிய விதிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது. பேச்சில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. யாரிடம் பேசினாலும் இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது முன்னேற்றத்தைத் தரும். கோவிந்தநாமத்தை சொல்வது நன்மையைத் தரும். 6 இல் குரு உச்சம் பெறுவதால் ஆரோக்கியம், எதிரிகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையைத் தரும். கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தரராஜ பெருமாள், அலமேலு தாயார் வழிபாடு, மேல் திருப்பதியில் உள்ள பாலாஜியை தரிசனம் செய்வது உங்களுக்கு சகலவித நன்மைகளை ஏற்படுத்தும்.கும்பம்
முன்னேற்றம்
வேலைவாய்ப்பு
அனுகூலங்கள்
கவனம்
வழிபாடு