Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம்


  • Guru Peyarchi 2026: 2026 குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி மே 26 ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி ஜூன் 2 ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.

    Advertisement

    குருவின் இந்த பெயர்ச்சியால் மகரம் ராசியினருக்கு தொழில், பணவரவு, சமூக மதிப்பு, குடும்ப நலன் மற்றும் புதிய வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறக்கூடும். என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.

    மகரம்

    மகரம் ராசியினருக்கு குரு பகவான் 6 ஆம் இடத்தில் இருந்து 7 ஆம் இடத்திற்கு உச்சம் பெற்றுள்ளார். 7 ஆம் பார்வையாக குரு உங்களைப் பார்க்கிறார். இது உங்களுக்கு அற்புதமான யோகத்தைக் கொடுக்கும். காலஹஸ்தி செல்வது அனுகூலத்தை ஏற்படுத்தும். நவக்கிரகத்தில் இருக்கும் ராகு கேதுவை வழிபாடு செய்வது, கோளார் பதிகத்தை சொல்லிக் கொண்டே இருப்பது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    அனுகூலம்

    ஏழரை சனி உங்களுக்கு ஏற்கனவே விலகி விட்டது. தற்போது 3 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவானையும் குரு பகவான் பார்வையிடுகிறார். 2 ஆம் இடத்தில் இருக்கும் குரு டிசம்பர் முதல் ஜென்மத்துக்குப் போகிறார். 8 இல் இருக்கும் கேது 7 ஆம் இடத்துக்குப் போகப் போகிறார். இந்த முறை குரு பார்வையில் இருப்பதால் ஏராளமான நன்மைகள் உங்களுக்கு ஏற்படப் போகிறது.

    பணவரவு

    பணவரவு அற்புதமாக இருக்கும். நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். முதலீடுகளை செய்வீர்கள். திருமண யோகம் உண்டாகும். மனதில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக உத்தியோகம் ரீதியாக இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    சொத்து சேர்க்கை

    அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். பெரிய மனிதர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலை, மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலையில் அதீத கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பெரிய ஆபத்துகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கவனம்

    அதேபோல, மற்றவர்கள் குடும்பத்தில் நீங்களும் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்த்துக் கொள்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். ஏழரை சனி முடிந்துவிட்டாலும் 7 இல் குரு விஷயத்தில் சிறிது கவனமாக இருப்பது நன்மை தரும். குரு பகவான் மகரம் ராசியினருக்கு உறவுகள், கூட்டுத் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் முக்கியமான முன்னேற்றங்களை வழங்கப் போகிறார்.

    Advertisement

    பிரச்சனை தீரும்

    நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து மனநிம்மதி அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள், வியாபார வளர்ச்சி மற்றும் முக்கிய நபர்களின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். பொருளாதார ரீதியாக வருமானம் உயர்ந்து, கடன் சுமைகள் குறையும் வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையலாம்.

    வெளிநாடு யோகம்

    குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும். வெளிநாட்டு வாய்ப்புகள் மற்றும் பயணங்களும் சாதகமாக அமையலாம். குருவின் அருளால் வாழ்க்கையில் நிலைத்தன்மை, மதிப்பு மற்றும் முன்னேற்றம் அதிகரிக்கும் காலமாக இந்த குருப்பெயர்ச்சி அமையும்.

    English Summary

    Guru Peyarchi 2026 brings significant career growth, financial gains, and new opportunities for Capricorn (Magaram) natives. Jupiter’s transit supports success, recognition, and overall prosperity.