குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?


  • Guru Peyarchi: ஆண்டுக்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்யும் குரு பகவான், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது உச்ச ராசியான கடகத்தில் பிரவேசிப்பது மிகவும் முக்கியமான ஜோதிட நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் பெரும்பாலான ராசிக்காரர்களுக்கும் நன்மைகள் அதிகரிக்கும். அதே நேரத்தில், பிற கிரகங்களின் அமைப்பு மற்றும் குருவின் விசேஷ பார்வைகள் காரணமாக பலன்களின் அளவு ராசிக்கு ராசி மாறுபடும்.

    Advertisement

    திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 2026 ஜூன் 2 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி அடைந்துள்ளார். குருவின் 5, 7, 9 ஆம் பார்வைகள் முறையே விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசிகளில் பதிவதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு யோகங்கள் உருவாகின்றன.

    Advertisement

    மேஷம்

    மேஷ ராசியினருக்கு நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த எண்ணங்கள் நிறைவேறும் வாய்ப்பு அதிகம். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் மூலம் நன்மைகள் கிடைக்கலாம்.

    குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியத் தடைகள் விலகும். வருமானம் அதிகரித்தாலும் செலவுகளும் இருக்கும் என்பதால் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படலாம். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். எந்த தொழிலில் இருந்தாலும் நேரடி கவனம் வெற்றியைத் தரும். ராகவேந்திரர் வழிபாடு சிறந்த பலன்களை அளிக்கும்.

    ரிஷபம்

    ரிஷப ராசியினருக்கு திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றமும் மாற்றமும் கிடைக்கும் காலமாக இது அமைகிறது. அலுவலகத்தில் நேர்த்தியும் பொறுப்புணர்வும் அவசியம். சிலருக்கு பணிச்சார்ந்த பயணங்கள் தடைபடலாம்; ஆனால் அது பின்னர் நன்மையாக மாறும்.

    Advertisement

    பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தாமதமாக இருந்தாலும் நிச்சயமாக கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. புதிய உறவுகளுடன் நிதானமாக பழக வேண்டும். பிள்ளைகள் தொடர்பான சுப நிகழ்வுகள் நடைபெறலாம். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. நரசிம்மர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

    மிதுனம்

    மிதுன ராசியினருக்கு உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் காலமாக இது இருக்கும். பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும். சக பணியாளர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது நல்லது.

    குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் மற்றும் பொருள் சேர்க்கை ஏற்படும். வீடு மற்றும் நிலம் தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பழைய கடன்களை முடிக்க முயற்சிப்பது நல்ல பலனைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி காணப்படும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மகாலட்சுமி வழிபாடு செல்வ வளத்தையும் மன அமைதியையும் வழங்கும்.

    English Summary

    Guru peyarchi: Jupiter's transit into Cancer in 2026 brings promising opportunities, career growth, and financial improvements for Mesham, Rishabam, and Mithunam natives. With proper planning and dedication, this period can bring success, prosperity, and positive changes in both personal and professional life.