Guru Peyarchi 2026: உச்ச குருவால் மிதுன ராசிக்கு அற்புத யோகம்.. தொழில் தொடங்கும் யோகம்


  • 2026 ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த உச்ச குருப்பெயர்ச்சியால் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, அதிர்ஷ்டம் ஏற்படுமா என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். அறிவு, பணம், திருமணம், குழந்தை பாக்கியம், ஆன்மீகம், அதிர்ஷ்டம் ஆகியவற்றிற்கு காரணமான கிரகமே குரு. ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய கிரகமாகவும் குரு பார்க்கப்படுகிறார்.

    Advertisement

    குரு பகவான் ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் தங்கி, பின்னர் அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இப்படியாக 12 ராசிகளையும் சுற்றி வர அவருக்கு 12 ஆண்டுகள் ஆகும். இதுவே "குருப்பெயர்ச்சி" என்று அழைக்கப்படுகிறது.

    2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குருப்பெயர்ச்சியில், குரு பகவான் மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி செய்யும் வீடு. அதிலும் குரு உச்சம் பெறுவதால் இந்த பெயர்ச்சி மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த குருப்பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு ராஜயோகம், பணவரவு, திருமண யோகம், தொழில் முன்னேற்றம் கிடைக்கலாம். அதேசமயம் சில ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய சூழலும் உருவாகலாம்.

    Advertisement

    குருவின் பார்வை படும் ராசிகளுக்கு பெரிய மாற்றங்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள் மற்றும் ஆன்மீக முன்னேற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மிதுனம் ராசி பலன்

    மிதுன ராசியினருக்கு 2 ஆம் இடத்தில் குரு பகவான் உச்சமாகி வருகிறார். மிகப்பெரிய யோக பலன்கள் கிடைக்கும். தன, வாக்கு, குடும்ப ஸ்தானம் வலுக்கும். 6, 8, 10 ஆம் இடங்கள் குருவின் பார்வையில் யோக பலன்களை கொடுக்கப் போகிறது. நல்ல கடன்கள் அமையும். வீடு வாங்குவதற்காக கடன் வாங்குவீர்கள். அந்த கடன்களை அடைப்பதற்கான வருமானங்கள் வரும். எதிலும் ஒரு நிறைவு ஏற்படும்.

    Advertisement

    குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் ஏற்படும். இளம்பெண்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். எல்லாவற்றையும் சிந்தித்து செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஆணுக்கு பெண்ணாலும், பெண்ணுக்கு ஆணாலும் நன்மைகள் உண்டாகும். தோழமைகள் நல்ல உறவுகளாக மாறக்கூடிய அமைப்பு உண்டு. வியாபாரிகள், தொழில் செய்வோருக்கு நல்ல வருமானங்கள் வரக்கூடும்.

    ஆசிரியர் பணி, வழக்கறிஞர் துறைகளில் இருப்பவர்கள், பேச்சுத் துறையில் இருப்பவர்கள், நித்துறை, வங்கித் துறை, நீதித் துறையில் தொடர்புள்ளவர்களுக்கு அபரிமிதமான பண வரவு உண்டாகும். நியாயமான கடன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். வேலையை விட்டுவிட்டு தொழில் செய்யும் அமைப்பு உள்ளது.

    Advertisement

    எல்லா வகையிலும் தொட்டது துலங்கக்கூடிய அமைப்பு ஏற்படும். சனி பகவான் 11 ஆம் இடத்திற்கு வருவதால் வரும் மூன்று, நான்கு வருடங்களுக்கு தொட்டது துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். வியாபாரம், தொழில் நன்றகா இருக்கும். குடும்பம் நன்றாக இருக்கக்கூடிய, குடும்பம் அமையக் கூடிய வாய்ப்பு ஏற்படும். அஷ்டமத்து சனியால் பட்ட துன்பங்களில் இருந்தெல்லாம் விடுபட்டு முன்னேறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

    English Summary

    Guru Peyarchi 2026: Guru Peyarchi 2026 is expected to bring powerful positive changes for Mithunam Rasi natives. Career growth, financial success, marriage prospects, property gains, and family happiness are likely during this favorable Jupiter transit into exalted Kadagam.