Guru Peyarchi 2026: கன்னி ராசிக்கு லாபத்தில் குரு.. கொட்டும் அதிர்ஷ்டம்.. வெளிநாடு செல்லும் யோகம்


  • Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    குருப்பெயர்ச்சியான வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 25 ஆம் தேதியன்றும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பகவான் மீனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி பெற்ற வீடு. குரு அங்கு உச்சம் பெறுகிறார். உச்சம் பெறக்கூடிய குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் என்பது மிகவும் முக்கியம்.

    Advertisement

    குரு விஷேச பார்வையாக 5 ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்க்கிறார். சமசப்த பார்வையாக மகரத்தைப் பார்க்கிறார். 9 ஆம் பார்வையாக மீனத்தைப் பார்க்கிறார். விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பார்வை படுவதால் மிகுந்த பலம் பெறும். ஜனன காலத்தில் இந்த 3 ராசிகளுக்கும் நன்றாக இருந்தால் பலம் அதிகமாகும். கடகத்தில் இருக்கும் குரு கன்னி ராசியினருக்கு என்னவிதமான பலன்களை கொடுக்கப் போகிறார், தெய்வ வழிபாடு முறைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினருக்கு 4, 7 க்கு உரிய குரு பகவான் 11 ஆம் இடத்துக்கு லாபத்தில் வருகிறார். லாபத்தில் வந்து குடும்ப ஸ்தானத்தை, பூர்வ புண்ணிய ஸ்தானத்தை, தைரிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். பதட்டம் குறையும். அலர்ஜி, ஜாயிண்டுகளில் வலி, தோல், விட்டமின் டி போன்ற பாதிப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம்.

    Advertisement

    பயணங்கள்

    மாற்றங்கள் வந்தால் எடுத்துக் கொள்வது நன்மை. கோயில் திருப்பணிகளை செய்து கொடுப்பீர்கள். கடல் கடந்து தொழில், உத்தியோகம், வியாபாரம் செய்வீர்கள். ஈரான், அமெரிக்கா போரிலும் நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். யோக பலத்தை அதிகமாகப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்து வந்த பலவிதமான சிக்கல்கள் தீரும்.

    திருமண யோகம்

    குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்றத்தை அதிகமாகப் பெறுவீர்கள். துணை விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இணக்கமாக, சமூகமாக செல்வீர்கள். 7 இல் சனி இருப்பதால் அடுத்தடுத்து திருமண காரியங்கள் நடக்கும் யோகம் உண்டாகும். காதலுக்கு வீட்டில் அனுமதி கிடைக்கும். விவாகரத்து பெறலாம் என்று நினைத்தவர்கள் கூட மீண்டும் இணையும் யோகம் உண்டாகும்.

    Advertisement

    வழிபாடு

    நல்லது நடக்கக்கூடிய காலகட்டம். முதலீடுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வங்கி அதிகாரிகள் சொல்கிறார்கள் என்பதற்காக முதலீடு செய்யாமல் நன்றாக விசாரித்து செய்வது நன்மை பயக்கும். நிறைய அற்புதங்கள் கிடைக்கும். மற்றபடி எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். திருவனந்தபுரம் அனந்தபத்மநாத கோயில், ஸ்ரீரங்கம் அல்லது கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜப் பெருமாள் கோயிலிலும் வழிபாடு செய்வது நல்லது.

    English Summary

    Guru Peyarchi 2026: The 2026 Guru Peyarchi marks an important astrological event as Jupiter moves from Meenam to Kadagam, where it attains exaltation. This powerful transit is expected to bring significant changes, prosperity, and spiritual growth for several zodiac signs, especially Kanni Rasi natives. The article explains Jupiter’s special aspects, expected benefits, important cautions, and spiritual remedies associated with this transit.