குருப்பெயர்ச்சி 2026: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டமா?.. உச்சம் பெறும் குருவின் சக்திவாய்ந்த பலன்கள்


  • குருப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    குருப்பெயர்ச்சியான வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 25 ஆம் தேதியன்றும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பகவான் மீனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி பெற்ற வீடு. குரு அங்கு உச்சம் பெறுகிறார். உச்சம் பெறக்கூடிய குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் என்பது மிகவும் முக்கியம்.

    Advertisement

    குரு விஷேச பார்வையாக 5 ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்க்கிறார். சமசப்த பார்வையாக மகரத்தைப் பார்க்கிறார். 9 ஆம் பார்வையாக மீனத்தைப் பார்க்கிறார். விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பார்வை படுவதால் மிகுந்த பலம் பெறும். ஜனன காலத்தில் இந்த 3 ராசிகளுக்கும் நன்றாக இருந்தால் பலம் அதிகமாகும். கடகத்தில் இருக்கும் குரு மேஷ ராசியினருக்கு என்னவிதமான பலன்களை கொடுக்கப் போகிறார், தெய்வ வழிபாடு முறைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

    மேஷம் ராசி பலன்

    மேஷ ராசியினருக்கு குரு பகவான் 9, 12 ஆம் இடத்திற்கு அதிபதியானவர். இப்போது 4 ஆம் இடத்துக்கு குரு பகவான் வருகிறார். ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள், அதுதொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், கொழுப்பு, உடற்பயிற்சி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. உறவினர்களிடம் பிரச்சனைகள் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

    Advertisement

    முன்னேற்றம்

    மன அழுத்தம், மரண பயம் நீங்கும். சுபவிரயங்கள் ஏற்படக்கூடிய யோகம் உண்டு. வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, திருமணம் செய்வது, உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சுப காரியங்கள் போன்றவை நடக்கும். தொழில் கண்டிப்பாக கிடைக்கும். 10 ஆம் இடமான ஜீவன ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் தொழில் அற்புதமாக அமையும். புதிய வேலை, தனித் தொழில் கிடைக்கும்.

    தொழில்

    கூட்டுத்தொழிலிலை விரிவுபடுத்துவீர்கள். நீண்ட நாட்களாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தவர்கள் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகம், வியாபாரம், தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்கும் காலகட்டம். ஆரம்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும் காலகட்டம். ஆச்சரியத்தைக் கொடுக்கும் வகையில் மேன்மை ஏற்படும்.

    Advertisement

    மரண பயம்

    எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் நடக்கும். உறவுக்காரர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் டென்ஷனாவதை தவிர்ப்பது நல்லது. மரண பயம் நீங்கும். அடுத்தடுத்து முன்னேற்றம், வளர்ச்சி ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். குடும்பத்தில் இதுவரை காணப்பட்டு வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்மைகள் நடக்கும்.

    வழிபாடு

    உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த தடைகள் எல்லாம் தவிடு பொடியாகும். விவசாயம் செய்வது, கால்நடை விவசாயம் செய்வது, டிரஸ்ட், மருத்துவமனை ஆரம்பிப்பது போன்ற யோகம் உண்டாகும். டிஜிட்டல் மார்க்கெட்டிங், வீடியோ துறையில் நல்ல முன்னேற்றம், விரிவாக்கம் ஏற்படும். மந்திராலயம் ராகவேந்திரரை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    Guru Peyarchi 2026: The 2026 Guru Peyarchi marks an important astrological event as Jupiter moves from Meenam to Kadagam, where it attains exaltation. This powerful transit is expected to bring significant changes, prosperity, and spiritual growth for several zodiac signs, especially Mesham Rasi natives. The article explains Jupiter’s special aspects, expected benefits, important cautions, and spiritual remedies associated with this transit.