குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம்


  • Guru Peyarchi 2026: 2026 குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி மே 26 ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி ஜூன் 2 ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. குருவின் இந்த பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன. என்ன பலன்கள் எல்லாம் கிடைக்கப் போகிறது என விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ரிஷபம்

    ரிஷப ராசியினருக்கு சந்தோஷமான காலம் தொடங்கிவிட்டது. கலை, இலக்கியம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீங்கள் திட்டமிட்ட விஷயங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பாசிட்டிவாக இருப்பீர்கள். இளைய சகோதரன், சகோதரிகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.

    முன்னேற்றம்

    நிலம், இடம், வீடு விற்க முடியவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். மாரக்கெட்டிங், அட்வைஸிங் ஏஜென்சி, மீடியா ஏஜென்சி, ஆடிட்டிங் துறை, ஆர்கிடெக்சர், டிராப்ட்மேனாக இருப்பவர்களுக்கு பெரிய முன்னேற்றம் ஏற்படும். 7 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் திருமண யோகம் உண்டாகும். நவம்பர் மாதத்திற்குள் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் யோகம் உண்டு.

    Advertisement

    கடன் தீரும்

    கடனை அடைத்து முடிக்கம் யோகம் உண்டாகும். தூரமாகச் சென்ற நட்பு மீண்டும் உங்களை வந்து சேரும். புதிய தொழில் தொடங்கக்கூடிய யோகம் உண்டு. ஒரு பொருளை உற்பத்தி செய்து அடைக்கும் யோகம் உண்டாகும். ஆன்லைன் தொழில்களைச் செய்வீர்கள். மருத்துவர், சர்ஜன், மிலிட்டரியில் இருப்பவர்கள் மணமகன், மணமகளாக கிடைக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

    தைரியம்

    வேலையில் மிகப்பெரிய யோகம் உண்டாகும். வெளியூர் போகக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நட்பு வட்டாரங்கள் மூலமாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். இந்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய யோகம் உண்டாகும். மனதளவில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    Advertisement

    காதலில் வெற்றி

    காதலில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும் யோகம் உண்டு. உறவுகளில் ஏற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் அதிர்ஷ்டம் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த கேள்விகள் தேர்வில் கண்டிப்பாக வரும். பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும்.

    வெளிநாடு யோகம்

    வேறு ஊருக்குச் சென்று இன்னொரு கிளையைப் பார்ப்பது போன்றவை ஏற்படும். காது தொடர்பான பாதிப்புகள், வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. இந்த குருப்பெயர்ச்சியில் கண்டிப்பாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வேலை மூலமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரக்கூடிய அமைப்பு உள்ளது.

    English Summary

    Guru Peyarchi 2026: Guru Peyarchi 2026 brings powerful positive changes for Taurus (Rishabam) natives. Career growth, financial stability, family happiness, and unexpected opportunities are likely as Jupiter's favorable transit supports progress and prosperity.