Guru Peyarchi 2026: 2026 ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த உச்ச குருப்பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, அதிர்ஷ்டம் ஏற்படுமா என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். அறிவு, பணம், திருமணம், குழந்தை பாக்கியம், ஆன்மீகம், அதிர்ஷ்டம் ஆகியவற்றிற்கு காரணமான கிரகமே குரு. ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய கிரகமாகவும் குரு பார்க்கப்படுகிறார்.
குரு பகவான் ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் தங்கி, பின்னர் அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இப்படியாக 12 ராசிகளையும் சுற்றி வர அவருக்கு 12 ஆண்டுகள் ஆகும். இதுவே "குருப்பெயர்ச்சி" என்று அழைக்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குருப்பெயர்ச்சியில், குரு பகவான் மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி செய்யும் வீடு. அதிலும் குரு உச்சம் பெறுவதால் இந்த பெயர்ச்சி மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த குருப்பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு ராஜயோகம், பணவரவு, திருமண யோகம், தொழில் முன்னேற்றம் கிடைக்கலாம். அதேசமயம் சில ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய சூழலும் உருவாகலாம். குருவின் பார்வை படும் ராசிகளுக்கு பெரிய மாற்றங்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள் மற்றும் ஆன்மீக முன்னேற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம். குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு 3 ஆம் இடத்தில் குரு பகவான் மாறுகிறார். முழு வலிமையோடு அங்கிருக்கிறார். 8 ஆம் இடத்திற்கு அதிபதி 8 ஆம் இடத்தில் மறைவதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். பாக்கிய ஸ்தானத்தையும், 7 ஆம் இடத்தையும், 11 ஆம் இடத்தையும் குரு பகவான் பார்ப்பதால் திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். ஏற்கனவே திருமணத்தில் தோற்றுப் போனவர்களுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும். காதல் திருமண யோகம் உண்டாகும். காதலன், காதலிக்கு குடும்பத்தில் கிரீன் சிக்னல் கிடைக்கும். கூட்டுத் தொழில் நன்றாக இல்லாதவர்களுக்கு இந்த சமயத்தில் கூட்டுத் தொழில் நன்றாக இருக்கும். நண்பர்கள், உறவுகளால் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். வெளிநாடு, வெளிமாநில பயணங்கள் மூலமாக நன்மைகள் உண்டாகும். ஏற்கனவே வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தாய்நாட்டிற்கு வரக்கூடிய அமைப்பு ஏற்படும். பூர்வீகத்தில் இருக்கும் வீடு, காடு, நிலம் போன்றவற்றில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பாகப்பிரிவினை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மாவிடம் உறவுகள் இருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்து, மீண்டும் ஒன்று சேரக்கூடிய அமைப்பு ஏற்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆன்மீக யாத்திரைகள் நடக்கும். இஷ்ட தெய்வ தரிசனம் உண்டாகும். சிலர் கோவில் கட்டும் யோகம் உண்டாகும். சிலர் கும்பாபிஷேகம் செய்வீர்கள். தெய்வீக அனுபவங்கள், ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் ஏற்றங்கள் உண்டாகும் நல்ல காலகட்டமாக இருக்கம். லாபத்தில் இருக்கும் சனியை உச்ச குரு பார்ப்பதால் வேலை, தொழில், வியாபாரம், குடும்பம் சார்ந்த விஷயங்களில் நிறைய நன்மைகள் நடக்கும் நல்ல காலகட்டம்.ரிஷபம் ராசி பலன்
காதலுக்கு பச்சைக் கொடி
வெளிநாடு யோகம்
வழிபாடு