குருப்பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. வாழ்க்கையே மாறப்போகுது!


  • Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் 3 ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். அந்த 3 அதிர்ஷ்ட ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    குருப்பெயர்ச்சியானது வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 25 ஆம் தேதியன்றும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பகவான் மீனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி பெற்ற வீடு. குரு அங்கு உச்சம் பெறுகிறார். உச்சம் பெறக்கூடிய குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் என்பது மிகவும் முக்கியம்.

    Advertisement

    குரு விஷேச பார்வையாக 5 ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்க்கிறார். சமசப்த பார்வையாக மகரத்தைப் பார்க்கிறார். 9 ஆம் பார்வையாக மீனத்தைப் பார்க்கிறார். விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பார்வை படுவதால் மிகுந்த பலம் பெறும். ஜனன காலத்தில் இந்த 3 ராசிகளுக்கும் நன்றாக இருந்தால் பலம் அதிகமாகும். கடகத்தில் இருக்கும் குரு இந்த 3 ராசியினருக்கு என்னவிதமான பலன்களை கொடுக்கப் போகிறார், தெய்வ வழிபாடு முறைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். 10 ஆம் இடத்தில் குரு வருகிறார். 3 ஆம் அதிபதி 6க்கு உரியவர் 10 க்கு வருவது அற்புதத்தை ஏற்படுத்தும். இருப்பினும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வேலையில் பேப்பர் போடுகிறேன் என்பது, வாக்குவாதம் செய்வது, தான் சொல்வது தான் சரி என்பது, முதலாளிக்கு ஆலோசனை கூறுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.

    Advertisement

    கடன் தீரும்

    உறவுகளால் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். அடுத்தடுத்து செட்டிலாகும் யோகம் உண்டாகும். யோகத்தை அதிகமாகப் பெறுவீர்கள். பழைய கடன்கள் தீரும் அமைப்பு ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

    பதவி உயர்வு

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். ரத்தபந்த உறவுகள், தாய் வழி உறவுகளிடம் இருந்து வந்த மன தாங்கல்கள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். பெரிய பொறுப்புகளக்கு வரக்கூடிய யோகம் உண்டாகும். பதவி உயர்வு ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். யோகம் உண்டு. இன்னொரு வேலை, தொழிலை ஆரம்பிக்காமல் இப்போது இருக்கக்கூடிய வேலையை விடாமல் இருப்பது நல்லது.

    Advertisement

    மாற்றம் ஏற்படும்

    அமைதியாக இருப்பது பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் அமைதியாக இருந்தால் பெரிய ஏற்றங்கள் கிடைக்கும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், கூட்டாளிகள் மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் ஏற்படும். குடும்பத்தில் அற்புதம் ஏற்படும். சுபிக்ஷம் ஏற்படும். அந்நியோன்யம் அதிகரிக்கும். சுப செலவுகளை செய்வீர்கள். அந்நியோன்யம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள மற்றவர்களால் மன ஸ்தாபம் ஏற்படுவது, கோபமாக இருப்பது போன்ற நிலைமைகள் சரியாகும்.

    வழிபாடு

    10 இல் குரு வருவதால் திருமணத் தடைகள் நீங்கும். புதிய வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் நல்லவை நடக்கும். சுபகாரியங்கள் நடக்கும். வீடு, நிலம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். விவசாயம் நடைபெறும். பண்ணைகள் வாங்கும் யோகம் உண்டாகும். எல்லா விதத்திலும் ஏற்றம் ஏற்படும். பட்டீஸ்வரம் துர்க்கை வழிபாடு அனுகூலத்தைத் தரும். சுப்பிரமணிய புஜங்கத்தை தினந்தோறும் கேட்பது, சொல்வது நன்மையைத் தரும்.

    Advertisement

    விருச்சிக ராசி பலன்

    விருச்சிக ராசியினருக்கு 2 க்கும், 5க்கும் உடையவர் குரு பகவான். விருச்சிக ராசிக்கு 9 இல் குரு பகவான் வருகிறார். 5 ஆம் பார்வையாக விருச்சிகத்தைப் பார்க்கிறார். எழுந்தவுடன் தினந்தோறும் குளித்து விடுவது நல்லது. 12 வருடத்திற்குப் பிறகு குரு பகவான் வந்துள்ளதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும்.

    சிக்கல் தீரும்

    இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். அப்பா, அம்மாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. உங்களை விட பெரியவர்களை எல்லாம் நன்றாகப் பார்த்துக் கொள்வது நல்லது. பயணங்களில் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் மிகுந்த கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் சண்டை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

    Advertisement

    நல்ல காலகட்டம்

    தொலைதூரத்தில் இருப்பவர்கள் பெற்றோரிடம் பேசுவது நன்மை பயக்கும். அவர்களிடம் இணக்கமாக, பாசமாகப் பேசுவது நல்லது. நல்ல நேரம் என்பதால் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கக்கூடிய காலகட்டம். இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

    பிரச்சனை நீங்கும்

    பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் பிள்ளைகள், தொழிலில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் புதிய உறவுகள் வருவார்கள். தடைகள் அனைத்தும் நீங்கும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். தைரியம் ஏற்படும். மன வருத்தத்தில் அறைக்குள்ளேயே இருப்பீர்கள். அந்த நிலைமைகள் அனைத்தும் நீங்கும்.

    முன்னேற்றம்

    சுறுசுறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் அற்புதமாக இருப்பீர்கள். கோபப்பட்டுக் கொண்டே இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். அற்புதமும், ஆனந்தமும், தெய்வ தரிசனமும் ஏற்படும். ஜோதிடம், ஆன்மீகம், பெரிய அளவுக்கு ஏற்றமும், கெளரவமும் ஏற்படும். எல்லா வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நன்மைகள் ஏற்படும் காலகட்டம்.

    மீன ராசி பலன்

    மீன ராசியினருக்கு ஜென்மத்தில் சனி பகவான் இருக்கிறார். ராசியாதிபதியான குரு பகவான் 5 ஆம் இடத்தில் உச்சமாகி ராசியைப் பார்க்கிறார். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். குருப்பெயர்ச்சியில் விருச்சிகம், மகரம், மீனம் ராசியினருக்கு அற்புதமான யோகம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது.

    அனுகூலம்

    தொழில் நன்றாக இருக்கும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் விஷயத்தில் மேன்மை ஏற்படும். பூர்வீகத்தில் அனுகூலம் காணப்படும். புதிய அறிமுகத்தில் கவனம் தேவை. பெரிய அந்நியோன்யம் ஏற்படும். வேற்று மொழி மனிதர்களால் அதிக ஆதாயம் ஏற்படும். தெய்வ மார்க்க திருப்பணிகளைச் செய்வது நல்லது. எல்லா விதத்திலும் ஏற்றமும், சந்தோஷமும், அனுகூலமும் காணப்படும்.

    திருமண யோகம்

    யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டம். உத்தியோகத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். பல விதத்தில் நன்மைகளும், சந்தோஷங்களும் ஏற்படும். திருமணம் செய்து கொள்ள ஏற்ற காலம். திருமணத்தை தள்ளிப் போடாமல் செய்து கொள்வது நன்மை. குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் புதிய வரவுகள் கிடைக்கும்.

    ஆரோக்கியம்

    பிள்ளைகளிம் சண்டை போடுவது, கோபப்படுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வயிறு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அசிடிட்டி, கர்ப்பப்பை கோளாறு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் பெரிய ஏற்றம் ஏற்படும்.

    கவனம்

    சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் வண்டி வாகனங்களை இயக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவது நல்லது. அதேபோல, அவர்களுடைய பழக்க வழக்கங்கள், கூடா நட்பு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவது, அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வழிபாடு

    வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த இழுபறியான விஷயங்கள், சிக்கல்கள் தீரும். லாட்டரியில் அதிர்ஷ்டம் ஏற்படும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். பாஸ்போர்ட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் வழிபாடு அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும். உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது சிறந்த பரிகாரமாகும்.

    English Summary

    Guru Peyarchi 2026: Guru Peyarchi 2026 is expected to bring major positive changes for Thulam, Viruchigam, and Meenam Rasi natives. Career growth, financial gains, marriage yoga, family happiness, and spiritual progress are likely during this powerful Jupiter transit into exalted Kadagam.