Guru Peyarchi 2026: 2026 குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி மே 26 ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி ஜூன் 2 ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.
குருவின் இந்த பெயர்ச்சியால் துலாம் ராசியினருக்கு தொழில், பணவரவு, சமூக மதிப்பு, குடும்ப நலன் மற்றும் புதிய வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறக்கூடும். என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம். துலாம் ராசிக்கு குரு பகவான் 10 ஆம் இடத்துக்கு வருகிறார். பத்தில் குரு வந்தால் பதவி கெடும் என்பார்கள். ஆனால், உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். பதவி, உயர்வு, புகழ், பெயர், கெளரம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். பதவி மாற்றம் உண்டாகும். இழந்த பெருமைகளை மீட்டும் யோகம் உண்டாகும். 6 இல் உள்ள சனியை குரு பார்ப்பதால் எதிரிகள் விஷயத்தில் வெற்றிகள் உண்டாகும். துணைக்கு அனுகூலம் ஏற்படும். ரத்தபந்த உறவுகளுடன் அந்நியோன்யம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். எதிரிகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்தியாகும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் ஏற்படும். வயிறு, முதுகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். துலாம் ராசிக்கு சனி பகவான் உச்சம் பெறுவதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். 10 ஆம் இடaத்தில் வரும் குரு உங்களுக்கு நிறைய நன்மைகளைக் கொடுப்பார். உங்களுடைய வார்த்தைக்கு சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல அனுகூலங்கள் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பிரச்சனைகள், சவால்கள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொலைதூரத்தில் இருந்து அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். வண்டி, வாகன மாற்றங்கள் உண்டாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். அடுத்தடுத்து நல்ல முன்னேற்றம் ஏற்படும் நல்ல காலகட்டம். தொழில், பதவி மற்றும் சமூக மரியாதை தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைத்து முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார ரீதியாக வருமானம் அதிகரிக்கும் காலமாக இது அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சில ஆசைகள் நிறைவேறக்கூடும். எனினும் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. குரு பகவானின் அருளால் தன்னம்பிக்கை அதிகரித்து, வாழ்க்கையின் பல துறைகளிலும் முன்னேற்றம் காணும் காலமாக இந்த குருப்பெயர்ச்சி அமையும். பட்டீஸ்வரம் சென்று துர்க்கை வழிபாடு செய்வது உங்களுக்கு அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும்.துலாம்
குரு பார்வை
ஆரோக்கியம்
அனுகூலம்
நல்ல பலன்கள்
வருமானம் அதிகரிக்கும்
வழிபாடு