Guru Peyarchi 2026: 2026 குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி மே 26 ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி ஜூன் 2 ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.
குருவின் இந்த பெயர்ச்சியால் விருச்சிகம் ராசியினருக்கு தொழில், பணவரவு, சமூக மதிப்பு, குடும்ப நலன் மற்றும் புதிய வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறக்கூடும். என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம். விருச்சிகம் ராசியினர் சந்திரன் நீச்சமான ராசி. 8 ஆம் இடத்தில் இருந்த குரு 9 ஆம் இடத்தில் வந்து உச்சம் பெற்று ராசியைப் பார்க்கிறார். அதனால், அற்புதமான காலகட்டமாக இருக்கும். விருச்சிக ராசியினருக்கு 2, 5க்கும் உரிய குரு பகவான் 9 ஆம் இடத்திற்கு வருவது மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை தரும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பாரம்பரிய தொழில் செய்யக்கூடியவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாரிசு, வம்சம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். புதிய வரவுகள் உண்டாகும். வயிறும், ஜீரணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குறை ரத்த அழுத்தம், அதீத ரத்த அழுத்தம், ஹார்மோன் குறைபாடுகளில் கவனம் தேவை. குலதெய்வ கோயிலுக்குச் சென்று வருவது ஏற்றத்தைத் தரும். தைரியம் ஏற்படும். வாகனங்களில் அனுகூலம் காணப்படும். புத்திர சந்தான பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பிறந்த இடங்களில் நிறைய நன்மைகள் ஏற்படும். பிறந்த இடத்தில் வீடு வாங்குவது, விவசாய நிலங்கள் பார்ப்பது, நீண்ட நாட்களாக பார்க்க முடியாமல் இருந்த உறவுமுறைகளைப் பார்க்கக்கூடிய அமைப்பு ஏற்படும். கோர்ட், கேஸ் போன்ற நிலைமைகள் எல்லாம் மாறி சந்தோஷமான அமைப்பு ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். உத்தியோகத்தில், தொழிலில், வியாபாரத்தில், படிப்பில் ஏற்றம் உண்டாகும். விடுபட்ட திருமணம், தடைபட்ட திருமணங்கள் உண்டாகும். இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு இனி குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். வேலையில் புரோமோஷன், இன்கிரீமென்ட் இல்லாமல் இருந்தவர்களுக்கு எல்லாம் இனி நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். விருச்சிகத்துக்கு 5 ஆம் பார்வை இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரிய பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். இப்போது நல்ல நேரம் ஆரம்பித்துள்ளது. கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். எல்லா காரியங்களையும் கவனமாகச் செய்தால் மிகப்பெரிய நன்மைகள் ஏற்படும். திருநள்ளாறு சென்று வழிபாடு செய்து வருவது சனியின் பாதிப்பிலிருந்து காத்து சகலவித முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.விருச்சிகம்
புதியவரவு
அனுகூலம்
செல்வாக்கு
முன்னேற்றம்
வழிபாடு