Guru Peyarchi 2026: குருவின் அருளால் கும்ப ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. பணவரவு அற்புதம்


  • Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    குருப்பெயர்ச்சியான வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 25 ஆம் தேதியன்றும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பகவான் மீனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி பெற்ற வீடு. குரு அங்கு உச்சம் பெறுகிறார். உச்சம் பெறக்கூடிய குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் என்பது மிகவும் முக்கியம்.

    Advertisement

    குரு விஷேச பார்வையாக 5 ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்க்கிறார். சமசப்த பார்வையாக மகரத்தைப் பார்க்கிறார். 9 ஆம் பார்வையாக மீனத்தைப் பார்க்கிறார். விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பார்வை படுவதால் மிகுந்த பலம் பெறும். ஜனன காலத்தில் இந்த 3 ராசிகளுக்கும் நன்றாக இருந்தால் பலம் அதிகமாகும். கடகத்தில் இருக்கும் குரு கும்ப ராசியினருக்கு என்னவிதமான பலன்களை கொடுக்கப் போகிறார், தெய்வ வழிபாடு முறைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

    கும்ப ராசி பலன்

    கும்ப ராசியினருக்கு 2, 11 ஆம் இடத்துக்கு உரியவரான குரு பகவான் 6 ஆம் இடத்திற்கு வருகிறார். எதிரிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளிடம் நண்பர்களிடம், வெளியிடத்தில் பேசுவது, அவர்களைத் திட்டுவது, போனில் அவர்களைப் பற்றி பேசுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். பெரிய கெளரவம் ஏற்படும்.

    Advertisement

    செல்வாக்கு

    நீண்ட நாட்களாக இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். எதிர்பார்க்காத நல்லவைகள் நடக்கும் காலகட்டம். அற்புதமான அமைப்பு ஏற்படும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். ஏழரை சனியில் ஜென்ம சனி விலகியிருந்தாலும் சனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சியை தவறாமல் செய்வது நல்லது.

    பணவரவு

    குடும்பத்தில் அதிகளவிலான பணம் வந்து சேரும். கும்ப ராசியினர் வீட்டில் இருந்தால் அந்தக் குடும்பத்தில் தொழில், உத்தியோகம், வியாபாரம், அனுகூலம் போன்றவை கிடைக்கும். தனிப்பட்ட செல்வாக்கு ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். யோக பலன்களை அதிகளவில் பெறும் காலகட்டம்.

    Advertisement

    தொழில் தொடங்கும் யோகம்

    வேலையை விட்டு விடுவது, புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலம். கோச்சாரத்தின் அடிப்படையில் நிச்சயமாக செய்யலாம். ஒருமுறை உங்கள் குடும்ப ஜோசியரை பார்த்துக் கொண்டு ஆலோசனை பெறுவது ஏற்றத்தைத் தரும். கூட்டாளிகளிடம் பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள் வெளியில் வந்து தனித்தொழில் தொடங்கும் யோகம் ஏற்படும். பெரிய வெற்றிகளை குவிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

    ஆரோக்கியம்

    ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு ஏற்றத்தைத் தரும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தினந்தோறும் இரண்டு முறை பல் துலக்குவது, குளிப்பது நல்லது. முதுகு தண்டுவடம், கழிவுப்பாதை, முகத்தில் உள்ள உறுப்புகள் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை.

    Advertisement

    வழிபாடு

    6 இல் உச்சம் பெற்ற குரு கழிவுப் பாதையில் பாதிப்புகளைத் தராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி அனைத்துதிருப்பதி, திருமலை கோயில் கோபுர தரிசனம் உங்கள் வாழ்க்கையில் பெரும் அனுகூலத்தை ஏற்படுத்தும்.

    English Summary

    Guru Peyarchi: Guru Peyarchi 2026 is expected to bring positive changes for Kumbam Rasi natives as Jupiter moves into exalted Kadagam. Career growth, financial improvement, family happiness, spiritual progress, and relief from long-standing problems are likely. However, natives should avoid unnecessary expenses and take care of health. Worshipping Guru Bhagavan on Thursdays is considered beneficial.