Guru Peyarchi 2026: அதிர்ஷ்டத்தை அள்ளும் மகர ராசி.. இந்த 1 விஷயத்தில் ரொம்ப கவனம்


  • Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    குருப்பெயர்ச்சியான வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 25 ஆம் தேதியன்றும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி பெற்ற வீடு. குரு அங்கு உச்சம் பெறுகிறார். உச்சம் பெறக்கூடிய குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் என்பது மிகவும் முக்கியம்.

    Advertisement

    குரு விஷேச பார்வையாக 5 ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்க்கிறார். சமசப்த பார்வையாக மகரத்தைப் பார்க்கிறார். 9 ஆம் பார்வையாக மீனத்தைப் பார்க்கிறார். விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பார்வை படுவதால் மிகுந்த பலம் பெறும். ஜனன காலத்தில் இந்த 3 ராசிகளுக்கும் நன்றாக இருந்தால் பலம் அதிகமாகும். கடகத்தில் இருக்கும் குரு மகர ராசியினருக்கு என்னவிதமான பலன்களை கொடுக்கப் போகிறார், தெய்வ வழிபாடு முறைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

    மகர ராசி பலன்

    மகர ராசியினருக்கு 3க்கும், 12க்கும் உடைய குரு பகவான் 7 ஆம் இடத்திற்கு வருகிறார். 2 ஆம் இடத்தில் ராகு, 8 ஆம் இடத்தில் கேது இருப்பதால் காலஹஸ்தி சென்று வருவது மேன்மையைத் தரும். கோளார் பதிகத்தை தினந்தோறும் படிப்பது, கேட்பது நன்மையை ஏற்படுத்தும். ஏழரை சனி முடிந்துவிட்டது இருப்பினும் அஷ்டமத்தில் கேது இருப்பதால் வண்டி, வாகனத்தில் செல்லும்போது வேகமாக செல்வது, விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    Advertisement

    செல்வாக்கு கூடும்

    நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், ரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்றவற்றில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். நிறைய நன்மைகள் நடைபெறும் காலகட்டம். செல்வாக்கு கூடும். துணை விஷயத்தில் மிக கவனம் தேவை. அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையீடு, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    நன்மை

    கணவர், மனைவி இருவருமே இருவரின் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்வது நல்லது. பயணங்கள் சமயத்தில் ஆண்கள் பெண்கள் விஷயத்திலும், பெண்கள் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும்.

    Advertisement

    சிக்கல் தீரும்

    இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கல் தீரும். உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழில் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் நடக்கும். குருவின் சமசப்தம பார்வையில் இருப்பதால் எல்லா விதமான யோகங்களும் கிடைக்கும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். தைரியம் ஏற்படும். வண்டி, வாகனம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, புது முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

    கவனம்

    நிறைய சுப விரயங்கள் ஏற்படும். துணையிடம் இணக்கமாக செல்வது நல்லது. தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். குடும்ப விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.

    English Summary

    Guru Peyarchi 2026: The 2026 Guru Peyarchi marks an important astrological event as Jupiter moves from Meenam to Kadagam, where it attains exaltation. This powerful transit is expected to bring significant changes, prosperity, and spiritual growth for several zodiac signs, especially Magaram Rasi natives. The article explains Jupiter’s special aspects, expected benefits, important cautions.