Guru Peyarchi 2026: ஜாவா சுந்தரேஷனாக மாறும் துலாம் ராசி.. அதிர்ஷ்டமழை கொட்டப் போகுது


  • Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    குருப்பெயர்ச்சியான வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 25 ஆம் தேதியன்றும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பகவான் மீனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி பெற்ற வீடு. குரு அங்கு உச்சம் பெறுகிறார். உச்சம் பெறக்கூடிய குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் என்பது மிகவும் முக்கியம்.

    Advertisement

    குரு விஷேச பார்வையாக 5 ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்க்கிறார். சமசப்த பார்வையாக மகரத்தைப் பார்க்கிறார். 9 ஆம் பார்வையாக மீனத்தைப் பார்க்கிறார். விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பார்வை படுவதால் மிகுந்த பலம் பெறும். ஜனன காலத்தில் இந்த 3 ராசிகளுக்கும் நன்றாக இருந்தால் பலம் அதிகமாகும். கடகத்தில் இருக்கும் குரு துலாம் ராசியினருக்கு என்னவிதமான பலன்களை கொடுக்கப் போகிறார், தெய்வ வழிபாடு முறைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். 10 ஆம் இடத்தில் குரு வருகிறார். 3 ஆம் அதிபதி 6க்கு உரியவர் 10 க்கு வருவது அற்புதத்தை ஏற்படுத்தும். இருப்பினும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வேலையில் பேப்பர் போடுகிறேன் என்பது, வாக்குவாதம் செய்வது, தான் சொல்வது தான் சரி என்பது, முதலாளிக்கு ஆலோசனை கூறுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.

    Advertisement

    மாற்றம் ஏற்படும்

    அமைதியாக இருப்பது பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் அமைதியாக இருந்தால் பெரிய ஏற்றங்கள் கிடைக்கும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், கூட்டாளிகள் மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் ஏற்படும். குடும்பத்தில் அற்புதம் ஏற்படும். சுபிக்ஷம் ஏற்படும். அந்நியோன்யம் அதிகரிக்கும். சுப செலவுகளை செய்வீர்கள். அந்நியோன்யம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள மற்றவர்களால் மன ஸ்தாபம் ஏற்படுவது, கோபமாக இருப்பது போன்ற நிலைமைகள் சரியாகும்.

    கடன் தீரும்

    உறவுகளால் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். அடுத்தடுத்து செட்டிலாகும் யோகம் உண்டாகும். யோகத்தை அதிகமாகப் பெறுவீர்கள். பழைய கடன்கள் தீரும் அமைப்பு ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    பதவி உயர்வு

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். ரத்தபந்த உறவுகள், தாய் வழி உறவுகளிடம் இருந்து வந்த மன தாங்கல்கள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். பெரிய பொறுப்புகளக்கு வரக்கூடிய யோகம் உண்டாகும். பதவி உயர்வு ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். யோகம் உண்டு. இன்னொரு வேலை, தொழிலை ஆரம்பிக்காமல் இப்போது இருக்கக்கூடிய வேலையை விடாமல் இருப்பது நல்லது.

    வழிபாடு

    10 இல் குரு வருவதால் திருமணத் தடைகள் நீங்கும். புதிய வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் நல்லவை நடக்கும். சுபகாரியங்கள் நடக்கும். வீடு, நிலம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். விவசாயம் நடைபெறும். பண்ணைகள் வாங்கும் யோகம் உண்டாகும். எல்லா விதத்திலும் ஏற்றம் ஏற்படும். பட்டீஸ்வரம் துர்க்கை வழிபாடு அனுகூலத்தைத் தரும். சுப்பிரமணிய புஜங்கத்தை தினந்தோறும் கேட்பது, சொல்வது நன்மையைத் தரும்.

    English Summary

    Guru Peyarchi 2026: The 2026 Guru Peyarchi marks an important astrological event as Jupiter moves from Meenam to Kadagam, where it attains exaltation. This powerful transit is expected to bring significant changes, prosperity, and spiritual growth for several zodiac signs, especially Thulam Rasi natives. The article explains Jupiter’s special aspects, expected benefits, important cautions.