குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை!


  • Guru Peyarchi 2026: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி இன்று பெயர்ச்சியாகியுள்ளார். குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறும் இந்த காலகட்டத்தில் பணத்தை அள்ளும் 5 ராசிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 2026 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். கடகம் என்பது சந்திரனின் வீடு. சந்திரனின் வீட்டில் குரு உச்சம் பெறுகிறார்.

    Advertisement

    குருவுக்கு ஸ்தான பலத்தைவிட பார்வை பலம் மிகுந்த விசேஷமானது. விருச்சிகம், மகரம், மீன ராசியை பார்க்கும் குரு பகவானால் பணத்தை அள்ளும் யோகம் பெறும் 5 ராசியினர் குறித்து பார்க்கலாம்.

    கடகம் ராசி பலன்

    கடக ராசியினருக்கு உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் குரு பகவான் வருகிறார். டாப் கிளாஸ் யோகம் உண்டாகும். அனைத்து விதமான சுப காரியங்களும் உங்கள் வீட்டில் நடக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் ஏற்படும். மற்றவர்களின் தேவையில்லாத நடவடிக்கைகளால் வருத்தப்படுவதற்கான சூழல் உள்ளது.

    Advertisement

    குரு அருள்

    மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஆரோக்கியம், உடனிருப்பவர்கள் செய்யக்கூடிய விஷயத்தில் அதீத கவனம் தேவை. ஆலங்குடி குரு ஸ்தலம் செல்வது விசேஷமான பலனைத் தரும். குரு ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். புதிய அறிமுகத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொழிலதிபர்கள், தலைவர்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.

    கவனம்

    உங்களை சுற்றி எல்லா விஷயங்களையும் சிலர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது வெளியில் செல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நம்பிக்கை பாத்திரமானவர்களை துரோகத்தால் வெளியில் பார்ப்பார்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். டிசம்பத்தில் ஜென்மத்தில் கேது, 7 ஆம் இடத்தில் ராகு வருவதால் கோளார் பதிகத்தை தினந்தோறும் சொல்வது பாதுகாப்பு அரணாக இருக்கும்.

    Advertisement

    ஏற்றம்

    பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையேயான பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நீதிமன்றம், வழக்கு வரை சென்ற கணவன், மனைவி பிரச்சனைகள் தீர்ந்து அந்நியோன்யம் அதிகரிக்கும் நல்ல காலகட்டம். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் அமைப்பு உள்ளது.

    முடிவுகளில் வெற்றி

    தைரியமாக எல்லா முடிவுகளையும் எடுத்து செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். மாற்றம், முன்னேற்றம் தரக்கூடிய அருமையான காலகட்டம்.

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் பெறக்கூடிய காலகட்டம். 11 ஆம் இடத்திற்கு குரு பகவான் வருவதால இழந்த விஷயங்கள் அனைத்தும் படிப்படியாக மீண்டும் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். விமோசனம் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். திருவனந்தபுரத்தில் இருக்கக்கூடிய அனந்தபத்மநாபர் கோயிலில் சுவாமி வழிபாடு செய்வது முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

    Advertisement

    முதலீடுகளில் கவனம்

    பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். அவர்களுடைய உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பில் ஒன்றன்பின் ஒன்றாக முன்னேற்றம் ஏற்படும். தைரியமாக முன்னெடுத்து செல்லக்கூடிய காலகட்டம். யோக பலத்தை அதிகளவில் பெற்றுத் தரும். திருமணத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் இருக்கும் அந்நியோன்ய குறைபாடுகள் நீங்கும்.

    கணவராக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடமும் அந்நியோன்யம் அதிகரிக்கக்கூடிய அற்புதமான காலகட்டம். லாபத்தின் அளவு அபரிமிதமானதாக இருக்கும். முதலீடுகள் விஷயத்தில் நிபுணர்கள், குடும்பத்தினர், நண்பரகளிடம் கலந்தாலோசிக்கமால் செய்வது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுபகாரியங்கள் அதிகமாக நடக்கக்கூடிய ராசி.

    Advertisement

    பணவரவு

    குரு பகவானின் அருளால் தொழில், வியாபாரம், பணவரவு போன்ற விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வாய்ப்பு, பதவி உயர்வு அல்லது புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு அதிகம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும்.

    குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்பு உள்ளது. மனதில் இருந்த குழப்பங்கள் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரித்து கோவில் தரிசனம், வழிபாடுகளில் ஆர்வம் உருவாகும். இருப்பினும் செலவுகளை கவனமாக கட்டுப்படுத்துவது நல்லது.

    நம்பிக்கை

    உடல்நலத்தில் சிறிய கவனக்குறைவு கூட பிரச்சனைகளை தரக்கூடும். மொத்தத்தில், இந்த குருப்பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும் நல்ல முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக அமையும். 7 இல் சனி இருந்தாலும் திருமணத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும்.

    அலர்ஜி, ஒவ்வாமை, விட்டமின், கால்சியம் குறைபாடுகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு 9 ஆம் இடத்தில் இருந்த குரு 10 ஆம் இடத்திற்கு வருவதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். பட்டீஸ்வரம் துர்க்கையை வழிபாடு செய்வது அனுகூலத்தை ஏற்படுத்தும். சனியின் ஆதிக்கம் இருப்பதால் மற்றவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் எந்த மாற்றங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது.

    ஏற்றம்

    துணை விஷயத்தில் சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். குடும்பத்தாருடன் உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அற்புதமான காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது ஏற்றத்தைத் தரும். தொலைதூரத்தில் இருந்தாலும் பெற்றோரிடம் பேசுவது, அவர்களுக்குத் தேவையான விஷயங்களை செய்து கொடுக்க வேண்டும்.

    வேலையில் கவனம்

    உறவுகளுக்கும், உங்களுக்கும் இருந்த பாகப் பிரிவினை, சொத்து பிரிவினை பிரச்சனைகள் சரியாகக்கூடிய நல்ல காலகட்டம். உத்தியோகத்தில் அதீத கவனமாக இருப்பது நல்லது. அவசரப்பட்டு வேலையை விட்டு விடாமல் இருக்க வேண்டும். உத்தியோகமும், படிப்பும் கிடைக்கும் வரை இருக்கும் வேலையையும், படிப்பையும் விட்டு விடாமல் இருப்பது நல்லது.

    புதிய வாய்ப்பு

    குரு பகவானின் அருளால் தொழில், வியாபாரம் மற்றும் பணவரவு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் மெதுவாக நிறைவேற ஆரம்பிக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்து சமூகத்தில் மதிப்பும் உயரும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் அல்லது புதிய தொழில் முயற்சிகள் சாதகமாக அமையலாம்.

    வழிபாடு

    குடும்ப வாழ்க்கையில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். மனதில் இருந்த பயம், குழப்பம் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரித்து கோவில் தரிசனம், வழிபாடு போன்றவற்றில் ஆர்வம் உருவாகும். இருப்பினும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மொத்தத்தில், இந்த குருப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய முன்னேற்றங்களையும் நல்ல மாற்றங்களையும் தரக்கூடியதாக அமையும்.

    விருச்சிக ராசி பலன்

    விருச்சிக ராசியினருக்கு எல்லா விதத்திலும் அனுகூலங்களும், சந்தோஷம் காணப்படும். அஷ்டமத்தில் இருக்கும் குரு 9 ஆம் இடத்திற்கு வருகிறார். 9 ஆம் இடமென்பது பெரிய விசேஷமாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதாவது 12 ஆண்டுகளுக்குப் பிறகு விருச்சிகத்திற்கு 9 ஆம் இடத்தில் குரு பகவான் வந்திருக்கிறார். 2 ஆம் அதிபதியும், 5 ஆம் அதிபதியும் 5 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பூர்வ புண்ணியத்தில் இருந்த தோஷங்கள் நிவர்த்தியாகும்.

    குரு பார்வை

    திங்கள்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு கொடுப்பது மேன்மையைத் தரும். பெற்றோர், பெரியவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 5 ஆம் பார்வையாக குரு ராசியைப் பார்ப்பதால் சகலவிதத்தில் நன்மைகள், சந்தோஷங்கள், அனுகூலங்கள், ஏற்றங்கள் கிடைக்கும். எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்படும். வீட்டில் அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    நல்ல செய்தி

    இழந்தவற்றை எல்லாம் பிடிக்கும் காலம். குடும்பத்தில் புதிய உறவுகள் வருவார்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் கஷ்டங்கள் தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். திருமணத் தடை, குழந்தை பாக்கியத் தடை அனைத்து விதமான தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். நீண்ட நாள் கஷ்டங்கள் தீரும்.

    வழிபாடு

    தொழிலில் இருந்த சிக்கல்கள், தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். தாய், தந்தையின் உடல்நிலை, வயதில் பெரியவர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு சிறந்த பரிகாரமாக இருக்கும். திருநள்ளாறு சென்று வழிபாடு செய்து வருவது 5 ஆம் இடத்தில் இருக்கும் சனியின் பாதிப்புகளை குறைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த மன சஞ்சலங்கள் தீரும்.

    மீன ராசி பலன்

    2026 குருப்பெயர்ச்சி மீன ராசியினருக்கு பல புதிய வாய்ப்புகளையும் முன்னேற்றங்களையும் கொண்டு வரக்கூடியதாக அமைகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலன் தரும். இருப்பினும், வெற்றியை நிலைநிறுத்த பொறுமை, நிதானம் மற்றும் திட்டமிடல் மிகவும் அவசியமாகும்.

    தொழில் மற்றும் பணியிடம்

    பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் பார்வையில் உங்கள் மதிப்பு உயரும். புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். பணிச்சுமை அதிகரித்தாலும் அதனை நேர்மறையாக ஏற்றுக்கொள்வது எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

    எந்த சூழ்நிலையிலும் கோபத்தையும் அவசர முடிவுகளையும் தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளிடம் தேவையற்ற தர்க்கங்களில் ஈடுபட வேண்டாம். பணியிட ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது பாதுகாப்பானது. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும்.

    பணவரவு மற்றும் பொருளாதாரம்

    பணவரவு சீராக இருக்கும். இருப்பினும், வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற கடன்களை தவிர்ப்பது நல்லது. புதிய முதலீடுகள் செய்யும் முன் நன்கு ஆலோசித்து முடிவெடுக்கவும்.

    யாருக்கும் வாக்குறுதி அளிக்கும் முன் பலமுறை யோசிக்க வேண்டும். நிதி தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் எதிர்காலத்தில் நல்ல பலன்களைப் பெறலாம்.

    குடும்பம் மற்றும் உறவுகள்

    குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கைத்துணையுடன் நல்ல புரிதல் உருவாகும். இருப்பினும், அவர்களின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். பெற்றோர் மற்றும் குடும்ப பெரியோரின் ஆலோசனைகளை மதிப்பது சுபகாரிய தடைகளை நீக்க உதவும்.

    திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். கர்ப்பிணிப் பெண்கள் உடல்நலத்தில் கவனமாக இருப்பது நல்லது.

    மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்

    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு சாதகமான காலம் இது. நண்பர்களுடன் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற நட்புகள் மற்றும் கவனச்சிதறல்களைத் தவிர்ப்பது வெற்றிக்கு உதவும்.

    ஆரோக்கியம்

    காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அலர்ஜி உபாதைகள் ஏற்படக்கூடும். உடல்நலத்தில் சிறிய குறைகளை அலட்சியம் செய்யாமல் உடனடியாக கவனிக்க வேண்டும். வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்வது நல்லது. இரவு நேரங்களில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

    கலை, அரசியல் மற்றும் படைப்புத் துறை

    கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகத் துறையினர் மற்றும் படைப்பாளிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் பொது மேடைகளில் பேசும்போது நிதானத்துடன் செயல்பட வேண்டும். மேலிடத்திற்கு எதிரானவர்களுடன் தேவையற்ற நெருக்கம் தவிர்க்கப்பட வேண்டும்.

    பரிகாரம்

    சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபடுவது சிறந்த பலன்களை தரும். எள் எண்ணெய் தீபம் ஏற்றுதல், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல், முதியோர்களுக்கு ஆதரவு வழங்குதல் போன்ற செயல்கள் நன்மைகளை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்தை அளிக்கக்கூடிய காலமாக அமைகிறது. பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்பட்டால் இந்த காலகட்டத்தின் முழு பலன்களையும் அனுபவிக்க முடியும்.

    English Summary

    Guru Peyarchi: Jupiter's transit into Cancer on June 2, 2026, is expected to bring significant financial growth, career success, and family happiness for five zodiac signs. Cancer, Virgo, Libra, Scorpio, and Pisces natives are likely to experience major positive transformations during this period.