ஜூலை மாத பலன்கள்: ஜூலை மாதத்தின் முதல் பாதி (ஜூலை 1 முதல் 15 வரை) 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப் போகின்றன? தொழில், வேலை, வியாபாரம், பணவரவு, திருமணம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் எந்த ராசிக்கு யோகம், எந்த ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்என்பது குறித்த முழுமையான ராசி பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசியினருக்கு ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் வரும் சில மாற்றங்களால் வேதனை கொடுத்தாலும் அதில் வெற்றிகள் உண்டாகும். பதட்டமில்லாமல் நிதானத்துடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவது நல்லது. உங்களை மிகவும் வருத்திக கொண்டு வேலை செய்வதைத் தவிர்ப்பது நல்லது. எல்லோருக்கும் நல்லவர்களாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பதைத் தவிர்ப்பது நல்லது. உங்களை அதிகளவில் நேசிப்பது பெரிய வெற்றிகளையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். கஷ்டமான நிலைமைகள் நீங்கும். பண வரவு நன்றாக இருக்கும். பற்கள் விஷயத்தில் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முருகர் வழிபாடு சகலவித ஏற்றங்களையும் தரும். சுபகாரியத்தில் இருந்த சிக்கல் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடு நீங்கும். மன அழுத்தம் சரியாகும். ஏதாவதொரு யோசனை செய்து கொண்டே இருக்கும் அமைப்பு மாறும். உடல் ரீதியாக, மன ரீதியாக ஆக்கப்பூர்வமான பிரச்சனைகளை சரிசெய்து கொள்வது நல்லது. குலதெய்வ வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நன்மையைத் தரும். ரிஷப ராசியினருக்கு வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, பணவரவுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான தொற்று நோய்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சுபவிரய பிராப்தம் அதிகரிப்பதால் செவ்வாய்க்கிழமை மதிய வேளைகளில் ஏழைகளுக்கு தானமாக கொடுப்பது நன்மையைத் தரும். சுபவிரயத்துக்கான பணவரவு உண்டாகும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவது, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில் முறையாக காணப்பட்டிருந்த கஷ்டங்கள், பிரச்சனைகள் நீங்கும். நீண்டநாட்களாக இருந்து வந்த எல்லாவிதமான சங்கடங்களும் நீங்கும். குடும்ப விஷயத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாகன அமைப்பில் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டங்கள் பெரிய வெற்றிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். துர்க்கை வழிபாடு செய்வது உங்களக்கு முன்னேற்றத்தைத் தரும். மிதுன ராசியினர் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்ற எந்த விஷயமாக இருந்தாலும் உடனிருப்பவர்கள், மேலதிகாரிகளிடம் தர்க்கம், வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசுத் துறை, அரசியல்வாதிகள் வரும் 15 ஆம் தேதி வரை அதீத கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் வரும் மாற்றங்களை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும். யாராவது உங்களைப் பற்றி சொன்னாலும் வருத்தப்படாமல் இருப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். மன அழுத்தம் தீரும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம், படிப்பு ரீதியாக இழுபறியாக இருந்த சிக்கல்களை தீர்த்துக் கொள்வது சந்தோஷத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். வியாபாரத்தில் இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எல்லா விஷயத்திலும் பொறுமை, அமைதி காப்பது நன்மையைத் தரும். நரம்பு, கண், ரத்த அழுத்தம், இதயத்தில் பாதிப்பு இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடு சகலவித முன்னேற்றங்களையும் அள்ளித் தரும். வார்த்தைகளால் நிறைய விரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. யாரைப் பற்றியும் கேலி, கிண்டல் செய்வது, தவறாகப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடு காணப்படும் வாய்ப்புள்ளதால் அவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் ஏற்றம் காணப்படும். துணை விஷயத்தில் இருந்து வந்த மன தாங்கள்கள் தீரும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். சந்தோஷங்கள் ஏற்படும் காலகட்டம். இழுபறியாக இருந்த விஷயங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகம். யோக பலன்கள் உங்களுக்கு அதிகளவில் கிடைக்கும். அடுத்தடுத்து சுபகாரியம் நடக்கக்கூடிய யோகங்கள் உண்டாகும். சிவன் வழிபாடு, சிவனுக்கு நல்லெண்ணெய், வில்வம் கொடுப்பது, அருகம்புல் விநாயகருக்கு கொடுப்பது நன்மையைத் தரும். சைனஸ், ஒற்றை தலைவலி, தலைசுற்றல் விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு முதுகு தண்டுவடப் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய விஷயங்கள் ஏற்றத்தை ஏற்படுத்தும். வார்த்தையால் கெடுத்துக் கொள்ளாமல் அதனைப் பயன்படுத்திக் கொள்வது நன்மையைத் தரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளுக்கு படிப்பில் இருந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் சுபகாரியத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். சிம்ம ராசியினருக்கு பண வரவு அற்புதமாக இருக்கும். அனுகூலம் காணப்படும். பிள்ளைகளிடம் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக அறிமுகமாகும் நபர்களால் சந்தோஷம் ஏற்பட்டாலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டம். ஏதோ ஒரு நெருடல்கள் இருந்து கொண்டே இருக்கும். விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ஹார்மோன் குறைபாடுகள், மன அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. மற்றவர்கள் பற்றி வெளியில் பேசாமல் இருப்பது நன்மையைத் தரும். தேவையில்லாத நட்பால் பிரச்சனைகள் வரும் என்பதால் மிகுந்த கவனம் தேவை. உறவுக்குள் யாரிடத்தில் பேசினாலும் அவர்களிடம் அமைதி காப்பது நல்லது. உறவை பேணிக் காப்பது நன்மையைத் தரும். அரசுத் துறை, அரசியல்வாதிகள், பெரிய நிர்வாகம் நடத்துபவர்கள், பெரிய நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கு எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் நடக்கும் அனுகூலமான காலகட்டமாக இருக்கும். அரசாங்கத்தை நம்பி தொழிலில் இருப்பவர்களுக்கு பெண்டிங், பணவரவு கிடைக்கும். பதட்டத்தைத் தவிர்ப்பது நல்லது. உறவுமுறையில் பலவிதமான நன்மைகள் ஏற்படும். கன்னி ராசியினருக்கு திடீரென வயிறு சார்ந்த பிரச்சனைகளால் மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. இதயத்தை பரிசோதனை செய்து கொள்வது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றங்கள் ஏற்படும். மகான்கள் வழிபாடு வாழ்க்கையை மாற்றிக் கொடுக்கும். தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் குறைந்து ஏற்றம் காணப்படும். சுபகாரியங்கள் உண்டாகும். துணை விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், மன வருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும் நல்ல காலகட்டம். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏதாவது நெருடல் இருந்தால் அதனை சரிசெய்து கொள்வது நல்லது. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. துணையின் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். படிக்கட்டுகள், உயரமான இடங்கள், வாகனங்களில் கவனம் தேவை. தேவையில்லாத பதட்டத்தை தவிர்ப்பது நல்லது. துலாம் ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக அற்புதமான காலகட்டமாக இருக்கும். குலதெய்வத்தை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். தொழிலில் வரும் மாற்றங்களை எடுத்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். வார்த்தைகளில் அதீத கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இயக்குவது நன்மையைத் தரும். ஏற்றங்களும், நம்பிக்கையும் காணப்படும் நல்ல காலகட்டம். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்படு நன்மையைத் தரும். முருகருக்கு தினந்தோறும் விளக்கேற்றி வழிபாடு செய்வது கஷ்டத்தை தீர்க்கும். உறவுகளிம் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அலர்ஜி, ஜாயிண்டுகளில் ஏற்படும் வலிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பண வரவு உண்டாகும். நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் நல்ல காலகட்டமாக இருக்கும். விருச்சிக ராசியினர் பெருமாள் வழிபாடு செய்வது, மந்திரத்தை ஜெபிப்பது நன்மையைத் தரும். உத்தியோகத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் விஷயத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது. பதட்டத்தை தவிர்ப்பது நல்லது. நம்பிக்கையோடு இருக்கக்கூடிய விருச்சிக ராசியினருக்கு தேவையில்லாத பிரச்சனை, சங்கடங்கள் நிவர்த்தியாகும். உறவுமுறையில் காணப்பட்டிருந்த சிக்கல் தரும். பயணங்கள் வந்தால் எடுத்துக் கொள்வது நல்லது. நிறைய நல்ல காரியங்கள் குருவின் அருளால் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய நல்ல காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். நிறைய விஷயங்கள் நடைபெறும். பெற்றோர் ஆரோக்கியம், உங்களுடைய ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது, குறை ரத்த அழுத்தம், அதீத ரத்த அழுத்தப் பிரச்சனைகளை பார்த்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சியை தவறாமல் செய்ய வேண்டும். குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் மிகுந்த கவனம் தேவை. சோஷியல் மீடியா, செல்போன் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆவணி மாதம் வரை கவனமாக இருப்பது நன்மையையும், சந்தோஷத்தையும் தரும். நல்ல காரியங்கள் அணிவகுத்து ஏற்படும் நல்ல அமைப்பு உள்ளது. பூர்வ புண்ணியத்தை குரு பார்ப்பதாலும், 9 ஆம் இடத்திலும் குரு பார்ப்பதால் எல்லா விஷயத்திலும் ஏற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல் தீரும். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும். தனுசு ராசியினருக்கு குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் காணப்பட்டாலும் கொஞ்சம் அமைதி காத்து அதனை சரிசெய்து கொள்வது நல்லது. யோக பலத்தை அதிகளவில் பெறும் காலகட்டம். விஷ்ணு வழிபாடு ஏற்றத்தைத் தரும். விஷ்ணு சஹஸ்ஹர நாமம், விஷ்ணு காயத்ரி, நரசிம்மர் கவசம் படிப்பது மேன்மையைத் தரும். ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வேலை ஆட்கள் மூலமாக இருந்த பிரச்சனைகள் தீரும். ஏற்றமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும் நல்ல காலகட்டம். உறவுகள் தொடர்பான விஷயங்களில் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடைய படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் பதட்டத்தை தவிருங்கள். பிள்ளைகளுக்கு நீண்ட நாட்களாக செய்ய வேண்டிய விஷயங்களை அடுத்தடுத்து செய்து முடிப்பீர்கள். பெரிய முதலீடுகள், பெரிய சேமிப்புகள், அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை, குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், தொழில் மாற்றம் காணப்படும். ஆடை ஆபரணங்களை சேர்க்கும் யோகம் உண்டு. உறவுகளுக்குள் தேவையில்லாத பதட்டத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. மகர ராசியினருக்கு தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். விநாயகர், சிவன் வழிபாடு நன்மையைத் தரும். காரியசித்தி மாலை ஜெபிப்பது நன்மையைத் தரும். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கழுத்துப் பகுதியில் தேய்மானம், மயக்கம் வருவதற்கான வாய்ப்புள்ளது. அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு திடீர் ஏற்றம் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வில் இருந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். புதிய தொழிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதற்கான யோகம் உண்டாகும். திருமணத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். கணவன், மனைவி உடல்நிலையில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு கூடாது. அபிராமி அந்தாதியில் இருக்கக்கூடிய 90 ஆவது பாடலை படிப்பது குடும்பத்தில் உள்ள சங்கடங்களை நிவர்த்தி செய்யும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பெரிய வெற்றிகளும், அனுகூலமும் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது அதீத கவனம் தேவை. கேது 8 ஆம் இடத்தில் இருப்பது நன்மையைத் தரும். கும்ப ராசியினருக்கு யோகம் கொட்டும் காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் தேவையில்லாத ஆராய்ச்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வயிறு, கழிவுப் பாதை, ஜீரண தொந்தரவுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 60 வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் விஷயத்திலும், எதிரிகள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளை சாதாரணமாக எடை போடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ஏற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்த அமைப்புகள் நீங்கும். தொழில் ரீதியாக நிறைய நன்மைகளும், ஆனந்தமும் ஏற்படுத்திக் கொடுக்கும். 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் நினைத்தது நடக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். படிப்புத் தடை, உத்தியோகத் தடை, வியாபாரத் தடை பரிபூரண நிவர்த்தியாகும். ஆரோக்கியத்திலும், வாகனத்திலும் கவனம் தேவை. சர்பேஸ்வரரை தொடர்ந்து வழிபாடு செய்து வருவது ஏற்றத்தைக் கொடுக்கும். கோளார் பதிகத்தை தொடர்ந்து சொல்வது நன்மை. மீன ராசியினருக்கு உறவுகள் தொடர்பான விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். சளி, ரத்தத்தில் பரவும் தொற்று நோய்கள், அலர்ஜி போன்ற விஷயங்களில் கவனம் தேவை. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றங்கள் என நல்ல மாற்றங்கள் ஏற்படும் காலகட்டம். இழுபறியாக இருந்த விஷயங்களில் பரிபூரண நிவர்த்தியாகும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். லாபம் காணப்படும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வயிறு, கழிவுப்பாதை தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. புரோபயோட்டிக் உணவுகளை சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். தினந்தோறும் 40 நிமிடம் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். உறவு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் நன்மை ஏற்படும். குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைத் தரும். திருப்பதி பெருமாள் வழிபாடு செய்வது, கோவிந்த நாமங்களை உச்சரிப்பது நன்மையைத் தரும். பிள்ளைகளின் படிப்பு உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அதீத கவனம் தேவை.மேஷம் ராசி பலன்
பெரிய வெற்றி
கவனம்
வழிபாடு
ரிஷபம்
பணவரவு
அனுகூலம்
மிதுன ராசி பலன்
கடக ராசி பலன்
யோக பலன்கள்
வழிபாடு
முன்னேற்றம்
சிம்ம ராசி பலன்
கன்னி ராசி பலன்
துலாம் ராசி பலன்
நம்பிக்கை
விருச்சிகம் ராசி பலன்
பயணம்
செல்வாக்கு
குரு பார்வை
தனுசு ராசி பலன்
மகரம் ராசி பலன்
கும்பம் ராசி பலன்
ஏற்றம்
வழிபாடு
மீனம் ராசி பலன்
சிக்கல் தீரும்
வழிபாடு