ஜூன் மாத பலன்கள்: 2026 ஜூன் மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்த மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாக குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல ராசியினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் செயல் வேகம் மற்றும் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறார். 2026 ஜூன் மாதம் மேஷ ராசியினருக்கு பல புதிய வாய்ப்புகளையும் முக்கிய மாற்றங்களையும் கொண்டு வரக்கூடிய மாதமாக அமைகிறது.
தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண யோகம் போன்ற விஷயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படலாம். அதே நேரத்தில் சில விஷயங்களில் பொறுமையும் நிதானமும் அவசியமாக இருக்கும். இந்த மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய அம்சங்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். மேஷம் ராசியினருக்கு ஜூன் முதல் 3 மாதங்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ராசிநாதனான செவ்வாய் நல்ல நிலையில் இருப்பதால் அற்புதமான யோக காலகட்டமாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். ராசிநாதன் செவ்வாய் ராசியில் இருப்பது போல, 3 ஆம் இடத்தில் குரு, சுக்கிரன் அமர்ந்திருக்கின்றனர். மாத ஆரம்பத்திலேயே 4 ஆம் இடத்தில் குரு பகவான் வலிமையாக இருப்பது என பெரிய அளவில் நன்மைகள் உண்டாகும். வெளிநாடு, வெளிமாநிலம், தூர இடங்களுக்குச் செல்ல வேண்டும், வெளியூர், வெளிநாடுகளில் வேலை பார்க்க வேண்டும், அங்கு உயர்கல்வி பயில வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகள், லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரிகள், தொழில் முனைவோருக்கு வயதுக்கு ஏற்ற மாதிரி நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய யோகம் உண்டாகும். ராசிநாதன் ராசியோடு வலிமையாக இருப்பது நல்ல அமைப்பாகும். மாதத்தின் ஆரம்பத்தில் பெளர்ணமி யோகத்தில் இந்த மாதம் ஆரம்பிக்கிறது. சூரியன், சந்திரன் தங்களுக்குள் பார்த்துக் கொள்ளும்போது உங்களுக்கு யோக பலன்கள் கண்டிப்பாக ஏற்படும். சூரியன் 3 ஆம் இடத்திற்கு ஜூன் 15 ஆம் தேதிக்குப் பிறகு வரும்போது நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும். சுறுசுறுப்பு உண்டாகும் காலகட்டம். எல்லா விஷயங்களையுமே ஒத்திப்போடாமல் அடுத்தடுதது செய்வீர்கள். 20 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் வீடான 2 ஆம் வீட்டில் ராசிநாதன் வலிமையாக வருவதால் பண வரவு அற்புதமாக இருக்கும். மாமன் வழி உறவுகள் நன்றாக இருக்கும். மாமன் வகையில் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான உதவிகள், உறவுகள் கைகொடுக்கும் அமைப்பு ஏற்படும். 8 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டம், தனலாபம், பணவரவு ஏற்படக்கூடிய யோக காலகட்டமாக அமையும்.மேஷம்
வெளிநாடு யோகம்
யோக பலன்கள்
பணவரவு
குரு பார்வை