ஆடி மாத ராசி பலன்: ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
குரு, சனி, ராகு, கேதுக்கள் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகளை வைத்து வருட பலன்கள் சொல்லப்படுகின்றன. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடத்திற்கு ஒரு முறையும், குருப்பெயர்ச்சி 12 முதல் 13 மாதங்கள் வரைக்கும் குருவின் நிலையை வைத்தும் கணிக்கப்படுகின்றன. ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சூரியன் இருக்கும் நிலையை வைத்து மாதப்பெயர்ச்சி கணிக்கப்படுகிறது.
ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஆடி மாதம் முழுவதும் சூரிய பகவான் கடக வீட்டில் இருக்கப் போகிறார். கடகத்தோடு சூரியன் சுபத்துவத்தோடு இருக்கும் தன்மை மிகப்பெரிய யோகத்தைத் தரும். சூரியதிசை, சூரிய புத்தி நடந்து கொண்டிருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆடி மாதத்தின் நடுப்பகுதியில் அதவாது ஆகஸ்ட் 1 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் குரு நீச்சமடைகிறார். ஆகஸ்ட் 2 ஆம் தேதி செவ்வாய் ரிஷப வீட்டில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். புதன் பகவான் ஆடி மாதம் 3-ஆம் வாரத்தில் சூரியனோடும், குருவோடும் சேரும் அமைப்புள்ளது. அந்த வகையில், ஆடி மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். கடக ராசியினருக்கு பணம் வரக்கூடிய மாதமாக இந்த ஆடி மாதம் அமையும். தனாதிபதி ராசியிலேயே அமர்ந்து உச்ச குருவோடு இணைந்திருக்கிறார். மிகப்பெரிய அளவில் முதல் 15 நாட்களுக்கு 11 ஆம் இடத்திலேயே செவ்வாய் இருக்கிறார். முதல் 15 நாட்கள் நல்ல லாபம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நல்லவிதமான தன்மைகள் ஏற்படும். சகோதரர்களால் லாபம் உண்டாகும். சகோதரருடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களும், முன்னேற்றமும் ஏற்படும். அடுத்த 15 நாட்களுக்கு சகோதரர்களுக்கு செலவு செய்யக்கூடிய அமைப்பு ஏற்படும். சந்தோஷமான செலவுகள் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். 9 ஆம் இடத்தில் இருந்து உங்களுக்கு பாக்கியங்களை அனுபவிக்க தடை செய்து கொண்டிருக்கும் சனியை இந்த மாதத்தில் குரு, சுக்கிரன் பார்க்கப் போகின்றனர். இது மிகப்பெரிய யோகமான அமைப்பாகும். 9 ஆம் இடம் என்பது ஆன்மீகத்தை குறிக்கக்கூடிய இடமாகும். காசி, கங்கைக்கு செல்லக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது. இஷ்ட தெய்வ தரிசனம் உண்டாகும். ஸ்ரீ மகா பெரியவர், ரமணர் போன்ற மனிதர்களாகப் பிறந்து தெய்வங்களாக மறைந்த மூத்தவர்களின் அனுஷ்டானங்களை பார்க்கும் யோகம் உண்டாகும். ஏற்கனவே இருந்து வந்த சோகங்கள் தீரும். படிப்படியாக கிரகங்கள் மாறும் தன்மை உண்டாகும். கடந்த காலத்தில் நிறைய விரயங்களைச் சந்தித்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். தொழில், வேலையை இழந்தவர்களுக்கு அவை மீண்டும் கிடைக்கும் யோகம் உண்டாகும். அந்தஸ்து, கெளரவம் உயரக்கூடிய தன்மை ஏற்படும். கடந்த காலத்தில் உங்களை ஏளனமாகப் பார்த்தவர்கள் இனி அன்னாந்து பார்க்கக்கூடிய அளவிற்கு மதிப்பு, மரியாதை கூடும். அலுவலகம், சுற்றுப்புறம், வீடுகளில் நல்ல மரியாதை உண்டாகும். மன அழுத்தம் தீரும். நிறைய நன்மைகளும், பாக்கியங்களும் கிடைக்கும் யோகமான காலகட்டமாக இருக்கும். தொழிலில் வியாபாரத்தில் நல்ல ஏற்றம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். தந்தைவழி நன்மைகள் ஏற்படும். 9 ஆம் இடத்தில் இருக்கும் சனியால் பெற்றோரிடம் சிறு சிறு மன வருத்தம் ஏற்படும். அந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும்.கடகம் ராசி பலன்
பணவரவு
தரிசனம்
வழிபாடு
யோகம்
பாக்கியம்