அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. குரு, சூரியன் இணைவால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்


  • Weekly Rasi Palan: ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 27 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கடகம் ராசி பலன்

    கடக ராசி, லக்கினம் சார்ந்தவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். சூரியன் உங்கள் ராசிக்குள் பிரவேசிப்பதால் மிகப்பெரிய அளவிலான வெற்றிகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியம், அப்பாவுடனான பிரச்சனைகள், கால் முட்டியில் அடிபடுவது, மற்றவர்கள் பணம் அதிகமாக கேட்பது, உங்களை அவசப்படுத்துவது போன்ற நிலைமைகள் இருக்கும்.

    Advertisement

    குரு இணைவு

    குரு இணைவு ஏற்படும்போது அரசுப் பதவிகள் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும். ஆடி 15 ஆம் தேதிக்குப் பிறகு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். வெளியூரில் இடமாற்றம், அரசு சார்ந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். அப்பாவுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தந்தை வழி, தாய் வழி சொத்துகள் கிடைக்கும் யோகம் உண்டாகும்.

    கவனம்

    இன்று, நாளை நண்பர்களை வெளியில் வைத்துக் கொள்வது நல்லது. அவர்களுடன் இந்த இரண்டு நாட்கள் தொடர்பே கொள்ளாமல் இருப்பது நன்மையைத் தரும். இல்லையெனில் அவர்கள் மூலமாக செலவு, அழுத்தம் ஏற்படும். சந்திரன், கேது, சுக்கிரன் இணைவு இருக்கும்போது பணம் ரீதியாக, உளவியல் ரீதியாக பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

    Advertisement

    செலவுகள் அதிகரிக்கும்

    இந்த வாரத்தின் இறுதியில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அதனைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. கபம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    மாற்றம்

    உத்தியோகம், மேலதிகாரிகள் விஷயங்களில் கவனம் தேவை. உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் தேவை. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், பண மாற்றம், ஆன்மீக மாற்றம் ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும்.

    English Summary

    Weekly Rasi Palan for Kadagam: Let us look at the favorable outcomes in store for those born under the Kadagam sign during this week, from July 13 to 19.