கடக ராசியினருக்கு இனி நல்ல காலம்.. திருமண யோகம் முதல் பொருளாதார ஏற்றம் வரை

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கடகம் ராசி பலன்

    கடக ராசியினருக்கு முகம் வசீகரமாகும். மனதில் சந்தோஷம் பிறக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். திருமண யோகம் உண்டாகும். நிறைய கஷ்டங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். விரயத்தில் செவ்வாய் புதன் வீட்டில் இருப்பதால் வாழ்க்கை துணைக்கு கால் பாதம், கழுத்து சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    மாற்றம்

    பல் சார்ந்த சிகிச்சைகளை மேற்கொள்வீர்கள். தொண்டை உபாதைகள் வந்து சேரும். பழையதைக் கொடுத்து புதிய பொருள்கள் வாங்கும் அமைப்பு உள்ளது. எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவும், வேண்டிய வகையிலும் நடக்கும் அமைப்பு உண்டாகும். நல்ல மாற்றங்கள் ஏற்படும். நிம்மதியான காலகட்டமாக இருக்கும். உடல் எடை கூடுவதற்கான வாய்ப்புள்ளது.

    திருமண யோகம்

    திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். பேரக் குழந்தைகளின் ஆரோக்கியம், மருமகனின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்மைகள் உண்டாகும். ஹயக்ரீவர் வழிபாடு சகலவித நன்மைகளையும் தரும்.

    Advertisement

    நிதானம்

    குரு வழிபாடு சகலவிதத்தில் நன்மையைத் தரும். காது, மூக்கு, தொண்டை, சளி தொந்தரவில் கவனம் தேவை. சொந்தக்காரர்களால் தேவையில்லாத குழப்பமும், சங்கடமும் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபம் கொள்ளாமல் இருப்பது நன்மையைத் தரும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், வியாபாரம் தொடர்பான விஷயங்களை நிதானமாகப் பார்ப்பது நல்லது.

    பிரச்சனை தீரும்

    மறைமுக எதிரிகளால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். வியாழக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது ஏற்றத்தைத் தரும். ராகு அஷ்டமத்தில் இருப்பதால் அசட்டுத்தனமான தைரியம் வரும் என்பதால் நிதானமாக செயல்படுவது நன்மையைத் தரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்த சிக்கல் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

    Advertisement

    குடும்பத்தில் துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நீண்ட நாள் பிரச்சனைகளைத் தீரும். நீங்கள் நேசிக்கும் நபரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசுத் துறை, அரசியல்வாதிகள், அரசாங்கத்தில் இருப்பவர்கள் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the kadagam rasi people during this week of August 24 to 30.