Weekly Rasi Palan: ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். கடக ராசியினருக்கு பண வரவு அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. அறிவுக்கூர்மை அதிகரிக்கும். வேகம், விவேகத்துடன் செயல்படுவீர்கள். படிப்பு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். எந்த காரியத்தை எடுத்தாலும் தைரியத்தோடு அதை முடிப்பீர்கள். பல், வலது கண் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்துவிதமான நல்ல மாற்றங்களும் உண்டாகும். துணை விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தரும். அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கும் யோகம் உண்டாகும். பித்ரு தோஷம் நீங்கும். கொடுத்த வாக்குகளை குடும்பத்திலும், வெளியிடத்திலும் காப்பாற்றக்கூடிய அற்புதமான யோகம் உண்டாகும். தேவையில்லாத விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடன் வேலை செய்பவர்கள் பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. எல்லா விஷயத்திலும் நன்மைகளும், சந்தோஷமும் ஏற்படும். வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சைனஸ், காது, மூக்கு, தொண்டை, ஒற்றை தலைவலி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. திட்டமிடும் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் முடிவெடுப்பது நல்லது. சரஸ்வதி கடாட்சம் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஸ்ரீ ராகவேந்திரர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீத நன்மையைத் தரும்.கடகம் ராசி பலன்
மாற்றம், முன்னேற்றம்
ஆரோக்கியம்
வழிபாடு