Kadagam: உச்ச குருவால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பண வரவு, முதலீடு அதிகரிக்கும் மாதம்

  • ஆகஸ்ட் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஆகஸ்ட் 7 ஆம் தேதியான இன்று ஆடிகிருத்திகை முருகனுக்கு உகந்த நாள். இந்த நாளில் விரதம் இருப்பது திருமணப் பிரச்சனைகள், குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. பித்ருக்களான தர்ப்பணங்களை இந்த நாளில் செய்வது நன்மையைத் தரும். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு மேல் ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்பது நன்மை பயக்கும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆவணி அவிட்டம் வருகிறது. இந்த நாளில் கல்வியைத் தொடங்குவது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் வலுவிலந்து காணப்படுவதால் வண்டி, வாகனங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனையாக இருப்பது நல்லது. குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் கவனமாக இருப்பது நல்லது. அந்த வகையில், கடக ராசியினருக்கு இந்த மாதம் எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

    கடகம் ராசி பலன்

    கடக ராசியினருக்கு ராசிநாதன் சந்திரன் வலுவாக இருக்கிறார். ராசியில் உச்ச குரு இருக்கிறார். அற்புதமான காலகட்டமாக இருக்கும். பொலிவாக இனி இருப்பீர்கள். உடற்பயிற்சி, புத்தகம் படிப்பது, டயட் இருப்பது என புதிய விஷயங்களை செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். வயிறு சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நன்மை பயக்கும். எந்தவொரு விஷயத்தையும் வாக்குவாதமாக மாற்றாமல் இருப்பது நன்மை பயக்கும்.

    Advertisement

    நகை வாங்கும் யோகம்

    மற்றவர்களுடன் வீட்டில் உள்ள பிரச்சனை, தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். இந்த மாதம் உங்களுக்கு காசு, பணத்திற்கு எந்தவித குறைவும் இருக்காது. வங்கியில் பண இருப்பு நன்றாக இருக்கும். புதிய முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். சிலர் தங்கத்தில் முதலீடு செய்வது, அடகு வைத்த நகைகளை மீட்பது போன்ற யோகம் உண்டு.

    பணவரவு

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக சம்பள உயர்வு கிடைக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். செலவுகளில் கட்டுப்பாடோடு இருந்து சேமிக்கக்கூடிய மாதமாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் இந்த மாதம் அவ்வளவு சிறப்பாக இல்லை. விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எக்காரணம் கொண்டும் ஏஜென்சிக்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவதை தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    முதலீடு

    பங்குச்சந்தை, மியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. கணவர் சார்ந்த உறவுகள் மேம்படும். கணவர் உங்களின் பேச்சை கேட்பது, உங்கள் மேல் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அந்நியோன்யம் அதிகரிக்கும் மாதமாக இருக்கும்.

    வழிபாடு

    மூன்றாம் நபர்கள் தானாகவே உங்களை விட்டு விலகிச் செல்வதற்கான அமைப்பு ஏற்படும். 7 ஆம் இடத்தை உச்ச குரு பார்ப்பதால் திருமண யோகம் உண்டாகும். அபிராமி அல்லது மீனாட்சியம்மன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கடையூர் அபிராமி அம்மனை வழிபாடு செய்வது, மதுரை மீனாட்சி அம்மனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    August matha palan: In this astrological article, let us look in detail at the benefits, remedies, and deities to be worshipped for the Kadagam (Gemini) sign during the month of August.