கன்னி ராசிக்கு இந்த வாரம் சூப்பர்.. தொழில், பணம், குடும்பத்தில் என்ன நடக்கும்?

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினருக்கு இந்த வாரம் முக்கியமான வாரமாக இருக்கும். லாப ஸ்தானம், 10 ஆம் இடம் நன்றாக இருப்பதால் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். முக்கியமாக சீட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. போட்டிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் சந்தோஷமும், வெற்றியும் ஏற்படும் நல்ல காலகட்டம்.

    Advertisement

    சுபவிரயம்

    யோக பலத்தை அதிகளவில் பெறும் காலகட்டம். குடும்பத்தில் நிம்மதி, பிள்ளைகள் விஷயத்தில் நிம்மதி ஏற்படும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், உத்தியோக மாற்றம் உண்டாகும். லாபம், சந்தோஷம், அனுகூலம், சுபவிரய பாக்கியம் உண்டாகும். வாகனத்தில் அதிகமான நன்மைகள் ஏற்படும்.

    யோக பலன்

    பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். துணை விஷயத்தில் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். ஏற்றம் நிறைந்த காலகட்டம். அற்புதமான அமைப்பு உண்டாகும். இதுவரை தடைபட்டு வந்த அனைத்து விஷயத்திலும் நன்மைகள் ஏற்படும். முதுகு தண்டுவடம், பாதம் தொடர்பான பாதிப்புகள் கவனமாக இருப்பது மேன்மையைத தரும்.

    Advertisement

    ஆரோக்கியம்

    விரயத்தில் சூரியன், கேது உள்ளனர். இடுப்பு எழும்பு, குதிகால், அப்பா, மகனின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. ஆன்மீக சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். கேதர்நாத், பத்ரிநாத், மதுரா, காஞ்சி போன்ற இடங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரும் அமைப்பு உள்ளது. கேது இணைவு வருவதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சந்தோஷமும், திருப்தியும் உண்டாகும்.

    வழிபாடு

    சளி தொந்தரவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் ஏழைகளுக்கு உணவு தானமளிப்பது விரயங்களை கட்டுப்படுத்தும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். திருப்பதி வெங்கடேசப் பெருமாளை வழிபாடு செய்வது சகலவித முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Kanni rasi people during this week of August 17 to 23.