Kanni: கன்னி ராசிக்கு குதூகலமான மாதம்.. ஆகஸ்ட் மாதத்தில் வரும் பிரம்மாண்ட மாற்றம்

  • ஆகஸ்ட் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. பித்ருக்களான தர்ப்பணங்களை இந்த நாளில் செய்வது நன்மையைத் தரும். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு மேல் ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்பது நன்மை பயக்கும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆவணி அவிட்டம் வருகிறது. இந்த நாளில் கல்வியைத் தொடங்குவது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் வலுவிலந்து காணப்படுவதால் வண்டி, வாகனங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனையாக இருப்பது நல்லது. குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் கவனமாக இருப்பது நல்லது. அந்த வகையில், கன்னி ராசியினருக்கு இந்த மாதம் எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசி பெண்களுக்கு யார் எப்படி என்பதை தெளிவாக கணித்து வைத்திருப்பார்கள். யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும், யாரிடம் எப்படி இருக்க வேண்டும் என்று சரியாக அறிந்திருப்பீர்கள். இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு குதூகலமான மாதமாக இருக்கும். உங்களுக்கான விஷயங்களில் நீங்கள் இனி கவனம் செலுத்துவீர்கள். உங்கள் மன ஆரோக்கியத்திலும், உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவீர்கள்.

    Advertisement

    பணவரவு

    12 ஆம் இடத்தில் கேது இருப்பதால் செலவு அதிகமாகிக் கொண்டே இருந்திருக்கும். மருத்துவ செலவுகளும் அதிகமாக இருந்திருக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்துக்காக அதிகமாக செலவு செய்வீர்கள். பொருளாதாரத்தில் இனி அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். 12 இல் கேது இருந்தாலும் லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் பண வரவு நன்றாக இருக்கும். இருக்கும் பணத்தை பத்திரமாக வைத்து செலவுகளை குறைக்கக்கூடிய மாதமாக இருக்கும்.

    தொழில்

    இரண்டாவது திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த ஆகஸ்ட் மாதத்தில் நல்ல வரன்கள் அமையும். கோர்ட், கேஸ் என அழைந்து கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரபு நாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். தொழில் தொடங்குவதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். உணவு, கலைத் துறை, ஹோட்டல் வைப்பது, அழகுத் துறை போன்றவற்றில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

    Advertisement

    வழிபாடு

    தொழில் செய்வோர் பார்ட்னர்ஷிப்பை தவிர்ப்பது நன்மை பயக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உங்களுக்கு சகலவித ஏற்றங்களைத் தரும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை, வெண்ணெய் கொடுத்து வழிபாடு செய்வது நன்மை பயக்கும். ஸ்ரீ ராம ஜெயம் தினமும் 11, 18, 27, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் எழுவது நல்ல மன மாற்றத்தைத் தரும்.

    பரிகாரம்

    ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நன்மையைத் தரும். ரத்த தானம் செய்வது நன்மையைத் தரும். மஞ்சள் உடைகள் அணிவதை தவிர்ப்பது ஏற்றத்தைத் தரும். 10க்கு 9 என்ற வகையில் நன்மை கிடைக்கும் நல்ல காலகட்டமாக இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு அமையும்.

    English Summary

    August matha palan: In this astrological article, let us look in detail at the benefits, remedies, and deities to be worshipped for the Kanni (Virgo) sign during the month of August.