கும்ப ராசிக்கு குடைச்சலைத் தரும் சுக்கிரன், கேது.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம்


  • Weekly Rasi Palan: ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    ஆனி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். அந்த வகையில், ஜூலை 6 முதல் ஜூலை 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கும்பம் ராசி பலன்

    கும்பம் ராசி, கும்பம் லக்கினம் சார்ந்த நபர்களுக்கு முக்கியமான காலகட்டமாக இருக்கும். மகனின் ஆரோக்கியம், படிப்பை பார்த்துக் கொள்ள வேண்டும். ஆடிட்டிங், அட்மின், பார்மா துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நன்றாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு சிறு சிறு தடை, தாமதங்கள் ஏற்படும். கழுத்து, பின்பக்க வலிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    சுக்கிரன் கேது

    கடன், சட்ட நடவடிக்கைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 7 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் கேதுவால் வாழ்க்கைத் துணைக்கும், உங்களுக்கும் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள், மன உளைச்சல்களை ஏற்படுத்தும். தாயாருடைய ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மூக்கில், கண்ணில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    செல்வாக்கு கூடும்

    செல்வாக்குகள் கூடும். உறவுகளுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். கோளார் பதிகத்தை தினந்தோறும் படிப்பது ராகு, கேது தோஷங்களை நிவர்த்தியாக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

    Advertisement

    சிக்கல் தீரும்

    இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்க்காத விஷயங்கள் யோக பலத்தை அதிகளவில் பெற்றுத் தரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொழிலில் உத்வேகம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். பழைய கடன்கள் தீரும் அமைப்பு உள்ளது. நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

    கவனம்

    70 வயது வரை உள்ளவர்களுக்கு பெரிய யோகங்கள் கிடைக்கும். அதற்கு மேல் உள்ளவர்கள் ஆரோக்கியத்தை மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். முதுகு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. வீட்டிற்காக கடன் வாங்காமல் இருப்பது நல்லது. இரண்டு நாட்களுக்குப்பிறகு கடன் வாங்குவது நல்லது. சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதார ஏற்றமும் 70 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Weekly Rasi Palan for Kumbam (கும்பம் ராசி பலன்): Let us look at the favorable outcomes in store for those born under the Kumbam (கும்பம்) sign during this week from July 6 to 12.