ஆவணி மாத பலன்கள்: சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய இந்த ஆவணி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்கள், நல்ல பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
சூரியன் சிம்ம வீட்டிற்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். இந்த ஆவணி மாதத்தில் செவ்வாய் புதனுடைய வீட்டில் உபஜய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் உச்சமாகி கடக வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதன் சிம்ம வீட்டிற்கு வருகிறார். சூரியன் புதன், கேது இமைவு ஏற்படுகிறது. 6 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் வலுவிழந்து இருக்கிறார்.
சனி வக்கிரமாகி மீன ராசியில் இருக்கிறார். சந்திரன் தன்னுடைய பயணத்தை மீன வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த ஆவணி மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம். கும்ப ராசிகளுக்கு 5 இல் செவ்வாய், 6 இல் குரு, 8 இல் புதன் உச்சம், 9 இல் சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்கிறார். 5 இடங்களில் கிரகங்கள் இருப்பது கிரகமாலிகா யோகத்தை உருவாக்குகிறது. உச்ச குருவின் பார்வையால் தொழில் அற்புதமாக இருக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். பிரிந்துவிடலாம் என்றிருந்த கணவன், மனைவி, சண்டைகள், வழக்கு போட்டிருந்தவர்களுக்கு கூட நல்ல மன மாற்றம் பெறக்கூடிய அமைப்பு உண்டாகும். கும்ப ராசியினருக்கு ஜென்மசனி விலகிவிட்டது. ஜென்மசனி விலகினாலும் பிரச்சனை இருந்து கொண்டே தான் என்று புலம்பாதீர்கள். அப்போது இருந்ததைவிட படிப்படியாக பிரச்சனைகள் குறையத் தொடங்கும். நிறைய நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த சோதனைகள் விலகும். பிள்ளைகளின் தொழில் அமைப்பு நன்றாக இருக்கும். அவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். கடன் கிடைக்கும் அமைப்பு உள்ளது. கடன் வாங்கி வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். தொழிலில் நிலைத் தன்மை ஏற்படும். நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களோடு சேர்ந்து கூட்டுத் தொழில் ஆரம்பிக்கலாமா என்கிற எண்ணங்கள் ஏற்படும். அரசாங்கத்தில் இருக்கக் கூடியவர்களின் உதவி, ஒத்துழைப்பு கிடைக்கும். பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறக்கூடிய அமைப்பு உள்ளது. மனதிற்குப் பிடித்த, தேவையான பொருள்களை எல்லாம் வாங்கக்கூடிய நல்ல காலகட்டம். எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். புதன் உச்சமாவதால் வடமேற்கு, வடக்கு திசையில் இருந்து தொழில் தொடர்புகள் உண்டாகும் தன்மை ஏற்படும். பச்சை நிறம் சார்ந்த தொழில் அமைப்புகள் அமையும் யோகம் உண்டு. மாமன் சம்பந்தப்பட்ட விஷயங்கள், கணக்கு வழக்குகள் தொடர்பான விஷயங்களில் நல்ல வழிகாட்டுதல்கள் உண்டாகும். செல்போன், கேமரா சம்பந்தப்பட்ட நூதனக் கருவிகள் துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம். நடிக்க வேண்டும் என்று ஆசையில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும்.கும்ப ராசி பலன்
அனுகூலம்
வீடு, வாகன யோகம்
பணவரவு
திடீர் அதிர்ஷ்டம்