Rasi Palan This Week: கும்ப ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்.. பணவரவு அட்டகாசமாக இருக்கும்


  • Kumbam Rasi Palan: மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

    அந்த வகையில், மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)

    கும்ப ராசியினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் அனுகூலத்தை ஏற்படுத்தும். பிள்ளைகளின் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பது நல்லது. தொழில் ரீதியாக மாற்றம் வந்தால் எடுத்துக் கொள்ளலாம். படிப்பு, உத்தியோகத்தில் வரும் மாற்றங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    முன்னேற்றம்

    ஏற்றமும், நம்பிக்கையும் நிறைந்த காலகட்டமாக இருக்கும். அடுத்தடுத்து நன்மைகள் ஏற்படும். ரத்த பந்த உறவுகள் விஷயத்தில் வாக்குவாதம் நடைபெறாமல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் அந்நியர் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எப்போதும் பைரவர், வராஹி வழிபாடு உங்களை மேன்மை அடையச் செய்யும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும்.

    Advertisement

    ஆரோக்கியம்

    எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும். தொழிலில் இருந்த சங்கடங்கள் தீரும். வயிற்றில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, அவர்களுடைய கண், தொண்டை பகுதியில் எரிச்சல், காய்ச்சல் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. வீட்டில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும். வீட்டு ஆவணங்களில் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளது.

    பணவரவு

    குரு சுக்கிரன் வலிமையாக இருப்பதால் பண வரவு அற்புதமாக இருக்கும். காதல் கன்ஃபார்ம் ஆகும். வேறு ஜாதி அல்லது விவாகரத்து ஆனவர்களாக உங்கள் காதலன், காதலி அமைவதால் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. போனில் பேசுவதை தவிர்த்து நேரில் பேசுவது நல்லது. வாரத்தின் இறுதி பகுதியில் நன்மை ஏற்படும். மன தைரியம் அதிகரிக்கும். அரசு, அப்பா சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும்.

    Advertisement

    தொட்டது துலங்கும்

    நண்பர்களால் நிறைய நன்மைகள் நடைபெறக்கூடிய காலகட்டம். சொந்த பந்தங்களால் நிறைய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். நினைத்தது பழிக்கும் யோகமான அமைப்பு உள்ளது.

    English Summary

    Kumbam rasi palan: This week may bring positive progress and financial improvement for Kumbam rasi people. Family support, career growth, and new opportunities may increase happiness and confidence. Patience, spiritual activities, and avoiding unnecessary stress will help maintain peace and success throughout the week.