கும்ப ராசிக்கு பெண்களுக்கு விடுதலை.. நிம்மதி பெருமூச்சு விடும் காலகட்டம்.. இனி தொட்டது துலங்கும்

  • ஆகஸ்ட் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. பித்ருக்களான தர்ப்பணங்களை இந்த நாளில் செய்வது நன்மையைத் தரும். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு மேல் ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்பது நன்மை பயக்கும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆவணி அவிட்டம் வருகிறது. இந்த நாளில் கல்வியைத் தொடங்குவது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் வலுவிலந்து காணப்படுவதால் வண்டி, வாகனங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனையாக இருப்பது நல்லது. குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் கவனமாக இருப்பது நல்லது. அந்த வகையில், கும்ப ராசியினருக்கு இந்த மாதம் எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

    கும்பம் ராசி பலன்

    கும்ப ராசி பெண்களுக்கு ராசியில் ராகு அமர்ந்திருப்பதால் மற்றவர்கள் உங்களைப் பற்றி பேசக்கூடிய நிலைமை இருந்திருக்கும். பேசக்கூடாத ஒரு சூழ்நிலையில் கட்டுப்பட்டு இருப்பீர்கள். ஜென்ம ராகு ராசியில் இருப்பதால் நிறைய பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். அலுவலகத்திலும், குடும்பத்தில் பேச முடியாத சூழ்நிலையில் இருந்திருப்பீர்கள். வார்த்தையால் பிரச்சனைகள் வந்திருக்கும்.

    Advertisement

    நிம்மதி

    பழைய விஷயங்களைப் பேசி உங்களை மற்றவர்கள் கோபப்படுத்தும் நிலைமை இருந்திருக்கும். உங்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதி தரும் காலகட்டமாக இருக்கும். இதையா நினைத்து இவ்வளவு நாள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம் என்பதை உணர்ந்து பெருமூச்சு விடும் காலகட்டம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

    பிரச்சனை தீரும்

    பகைமையாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறி எல்லோருடனும் நட்பு பாராட்டுவீர்கள். கணவன், மனைவிக்குள் நட்பு அதிகரிக்கக்கூடிய நல்ல காலகட்டம். நிதி சார்ந்து நிறைய பிரச்சனை, கடன் தொல்லைகளை அனுபவித்து வந்திருப்பீர்கள். பணத்தை வைத்து குடும்பத்துக்குள் சண்டைகள் வந்திருக்கும். இனி அதுபோன்ற நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். கடனை பெருவாரியாக அடைப்பதற்கான முயற்சிகளை இந்த மாதத்தில் மேற்கொள்வீர்கள்.

    Advertisement

    கடன் தீரும்

    சொத்தை விற்று கடனை அடைப்பது, பெற்றோர் உதவியால் கடனை அடைப்பது, ஏதாவதொரு விதத்தில் கடனை அடைப்பது போன்ற நிலைமைகள் ஏற்படும். பொருளாதார நிம்மதி ஏற்படும். வெளிநாட்டு யோகம் நிச்சயமாக ஏற்படும். எந்த நாட்டுக்கு போக வேண்டும் என்று நினைத்தாலும் அங்கு செல்லக்கூடிய யோகம் உண்டாகும். வெளிநாட்டில் இருக்கும் பெண்களுக்கு சிட்டிசன்ஷிப் கிடைப்பது போன்ற அமைப்பு உள்ளது.

    சொத்து

    வெளிநாட்டில் கடன் வாங்கி சொத்து வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இனி அந்நியோன்யம் அதிகரிக்கும். நிம்மதி, சந்தோஷம் ஏற்படும். கணவர் மீது அன்பு அதிகரிக்கும். நிறைய பெண்கள் காதல் வயப்படுவதற்கான வாய்ப்புள்ளது. ராசியில் ராகு இருப்பதால் காதல் விஷயத்தில் தேர்ந்தெடுக்கும் நபர் மீது மிகுந்த கவனம் தேவை.

    Advertisement

    வழிபாடு

    உத்தியோகத்தில் இருந்து வந்த பாலிட்டிக்ஸ் நீங்கும். வேலை மாற்றம் செய்ய வேண்டுமானால் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு அதற்கான முயற்சிகளை செய்வது நன்மை பயக்கும். 5 ஆம் இடம் வலுவாக இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு அனுகூலம் ஏற்படும். அலர்ஜி, தொற்று போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நாக தெய்வங்களை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    August matha palan: In this astrological article, let us look in detail at the benefits, remedies, and deities to be worshipped for the Kumbam (Aquarius) sign during the month of August.