66 நாட்களில் தனுசு ராசிக்கு வரும் பிரம்மாண்ட மாற்றம்.. வாழ்க்கை பிரகாசமா மாறப்போகுது

  • Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு பல்வேறு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, அடுத்த 66 நாட்களில் பணவரவு, தொழில், வேலை, திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் தனுசு ராசிக்கு என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    அழகு, செளந்தர்யம், சந்தோஷம், காதல் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய கிரகம் சுக்கிரம். இந்த சுக்கிர பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மூல திரிகோணத்தில் இருக்கும் புதன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு, துலாம், புதன் இரு கிரகங்களும் சஞ்சாரம் செய்து டிசம்பர் 6 ஆம் தேதி வரை அமர்ந்து யோகத்தை தரப் போகின்றன.

    Advertisement

    புதனும், சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண வரவு உண்டாகும், திருமண யோகம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு இந்த 66 நாட்கள் அற்புதமாக இருககும். துலாம், சிம்மம், கும்ப ராசிக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். தனுசு, ரிஷபம், சிம்ம ராசிக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் 5 மடங்கு உயர்வு ஏற்படும்.

    அந்த வகையில், இந்த லட்சுமி நரசிம்ம யோகத்தால் தனுசு ராசியினருக்கு கிடைக்கப் போகும் நல்ல பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    தனுசு

    தனுசு ராசியினருக்கு அடுத்த ஒரு மாதத்திற்கு தொழிலில் கடுமையான காலகட்டமாக இருக்கும். அதீத டார்ச்சர், டார்கெட் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. வன்மத்தினால் உங்கள் மேலதிகாரி உங்களை படாதபாடு படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆரோக்கியம், கால் முட்டி, வயிறு சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    டபுள் புரோமோஷன்

    தொழில் ஸ்தானம் எனும் 10 ஆம் அதிபதி லாப ஸ்தானத்தில் அமர்கிறார். அங்கு சுக்கிரனும், 7 ஆம் இடத்துக்குரிய அதிபதியும் அமர்ந்துள்ளதால் பாராட்டுகள் குவியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு டபுள் புரோமோஷன் வருவதற்கான வாய்ப்புள்ளது. விருதுகள் குவியும். 2, 3 வேலைகளை ஒரே ஆளாக பார்ப்பீர்கள். உங்களுடைய சம்பளம் கூடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். பெரும் மாற்றங்கள் வந்து சேரும்.

    Advertisement

    குழந்தை பாக்கியம்

    குழந்தை, அம்மாவின் ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சனைகள் சரியாகும். திருமணமாவதற்கான வாய்ப்புகள் உண்டு. குழந்தை பாக்கியம், குழந்தை பிறக்கும் யோகம் உண்டாகும். நட்பு வட்டாரத்தின் மூலம் சந்தோஷம் ஏற்படும். குடும்பம், சுற்றுலா, கெட் டூ கெதர் என மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய காலகட்டம். வேலையில் பத்து மடங்கு உயர்வு ஏற்படும்.

    நோய், கடன் தீரும்

    பொறுமையாக பல காரியங்களை நின்று ஜெயிப்பீர்கள். பஞ்சம ஸ்தானம் நன்றாக இயங்குவதால் சொத்து சேர்க்கை உண்டாகும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். நோய், கடன் தீரும் அற்புதமான காலகட்டம். எதிரிகள் தொடர்பான பிரச்சனைகள் தீரும். அடுத்தகட்டத்திற்குச் செல்லக்கூடிய அமைப்பு உள்ளது. சீதா, ராமரை வழிபாடு செய்வது, அபிஷேகத்துக்கு கொடுப்பது ஏராளமான நன்மைகளைத் தரும்.

    Advertisement

    யோகம்

    காதல் வாழ்க்கை இனிக்கும். திருமண யோகம் ஏற்படும். தொழிலில் ஏற்றம் வரும். வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். கார் வாங்குவதற்கான யோகம் உண்டு. வெளிநாட்டில் குடியுரிமை, பதவி உயர்வு கிடைக்கும். முதல் ஒரு மாதங்கள் நிறைய தடங்கல்கள் வரும். ஆனால், அதற்குப் பிறகு படிப்படியாக ஏற்றம் ஏற்படும்.

    முன்னேற்றம்

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். வரும் 4 மாதங்களில் படிப்படியாக முன்னேறக்கூடிய யோகம் ஏற்படும். குடும்பத்தல் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சொந்த பந்தங்கள் தூரமாக இருக்கும் வரையில் உங்களுக்கு நன்மை உண்டாகும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    Lakshmi Narayana Yogam is expected to bring financial gains, career growth, marriage prospects for Dhanusu rasi people.