Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு பல்வேறு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, அடுத்த 66 நாட்களில் பணவரவு, தொழில், வேலை, திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் கன்னி ராசிக்கு என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
அழகு, செளந்தர்யம், சந்தோஷம், காதல் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய கிரகம் சுக்கிரம். இந்த சுக்கிர பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மூல திரிகோணத்தில் இருக்கும் புதன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு, துலாம், புதன் இரு கிரகங்களும் சஞ்சாரம் செய்து டிசம்பர் 6 ஆம் தேதி வரை அமர்ந்து யோகத்தை தரப் போகின்றன.
புதனும், சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண வரவு உண்டாகும், திருமண யோகம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு இந்த 66 நாட்கள் அற்புதமாக இருககும். துலாம், சிம்மம், கும்ப ராசிக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். தனுசு, ரிஷபம், சிம்ம ராசிக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் 5 மடங்கு உயர்வு ஏற்படும். அந்த வகையில், இந்த லட்சுமி நரசிம்ம யோகத்தால் கன்னி ராசியினருக்கு கிடைக்கப் போகும் நல்ல பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். கன்னி ராசியினருக்கு ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செல்வது நன்மை பயக்கும். செப்டம்பர் 28 ஆம் தேதி வரை ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது அவசியம். கண், தலை போன்ற பகுதிகளில் அடிபடுவற்கான வாய்ப்பு, அப்பாவின் ஆரோக்கியத்தில் பாதிப்பு, எலும்பு உடைவது, தேய்வது போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறிய அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. முதல் 25 நாட்களுக்கு மட்டுமே இதுபோன்ற பாதிப்புகள் நடக்கும். அதன் பிறகு உங்கள் ராசியாதிபதியும், 10 ஆம் இடத்துக்கு உரியவருமான புதன் பகவான் 2 ஆம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் அமர்வதால் வரும் 4 மாதம் பிரம்மாண்ட முன்னேற்றங்களைத் தரும். பணம் கொடுத்து ஏமாறுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப ஸ்தானம் இயங்குகிறது என்றால் அஷ்டம ஸ்தானமும் இயங்குகிறது என்று அர்த்தம். வராத பணங்கள் வந்து சேரும். காணாமல் போனவர்கள் பணம் கொண்டு வந்து தருவார்கள். திடீர் பணவரவு உண்டாகும். லஞ்சம், கிம்பளம், கமிஷன் பணம் போன்றவை வந்து சேரும். கணவன், மனைவி மூலமாக பணம் வந்து சேரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரகசியமாக வைத்திருக்கும் பணங்கள் அனைத்தும் வந்து சேரும். குடும்பத்தில் மருமகள், மருமகன் வந்து சேருவார்கள். பிள்ளைகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். நகைகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். ஆடம்பரமான பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்கக்கூடியோ யோகம் உண்டாகும். நிறைய தங்கம் வாங்கக்கூடிய அமைப்புள்ளது. பொருளாதாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்றமும், வளர்ச்சியும் ஏற்படும். குடும்பத்தில் சாதகமான நிறைய விஷயங்கள் நடக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மனைவியாக இருந்தால் கணவனின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பொருளாதாரம் 10 மடங்கு உயர்வைத் தரும். எதிர்பாராத பண வரவுகளான காப்பீடு பணம், உயில் சொத்துகள் போன்றவை வந்து சேரும். ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொள்வது நல்லது. பெருமாள் வழிபாடு, பிரசன்ன வெங்கடாசலபதிக்கு அபிஷேகத்திற்கு கொடுப்பது ஏற்றத்தைத் தரும். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்வது நன்மை பயக்கும். திருமண யோகம் உண்டாகும். வேலைவாய்ப்பு கிடைக்கும். நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு அற்புதமாக இருக்கும். பிற மாநிலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். முதல் 30 நாட்களுக்கு எதிரிகள் தொல்லைகள் இருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். புதிய உறவுகளால் ஏற்றம் உண்டாகும். பொருளாதாரம் ரீதியாக, சந்தோஷம் ரீதியாக 70 சதவீதம் நன்றாக இருக்கும்.கன்னி
முன்னேற்றம்
பணவரவு