கும்பம் ராசிக்கு அடுத்த 4 மாதம் அமோக யோகம்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு

  • Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு பல்வேறு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, அடுத்த 66 நாட்களில் பணவரவு, தொழில், வேலை, திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் கும்பம் ராசிக்கு என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    அழகு, செளந்தர்யம், சந்தோஷம், காதல் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய கிரகம் சுக்கிரம். இந்த சுக்கிர பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மூல திரிகோணத்தில் இருக்கும் புதன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு, துலாம், புதன் இரு கிரகங்களும் சஞ்சாரம் செய்து டிசம்பர் 6 ஆம் தேதி வரை அமர்ந்து யோகத்தை தரப் போகின்றன.

    Advertisement

    புதனும், சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண வரவு உண்டாகும், திருமண யோகம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு இந்த 66 நாட்கள் அற்புதமாக இருககும். துலாம், சிம்மம், கும்ப ராசிக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். தனுசு, ரிஷபம், சிம்ம ராசிக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் 5 மடங்கு உயர்வு ஏற்படும்.

    அந்த வகையில், இந்த லட்சுமி நரசிம்ம யோகத்தால் கும்பம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நல்ல பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    கும்பம்

    கும்பம் ராசியினருக்கு அடுத்த 4 மாதம் அற்புதமாக இருக்கும். டிசம்பர் மாதத்திற்குப் பிறகு ஞானிகளாக மாறக்கூடிய யோகம் உண்டாகும். இதுவரை உங்களை கேலி பேசியவர்கள், முதுகு குத்தியவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் அளவுக்கு மாற்றம் ஏற்படும். அடுத்த நான்கு மாதத்தில் விட்டுப்போன காதலன், காதலி திரும்பி வருவார்கள். பிரச்சனைகளில் இருந்த வீடு, பூர்வீக வீடு, தோட்டம் கைக்கு வரும்.

    சொத்து வாங்கும் யோகம்

    அப்பாவுடைய பொருள்கள், சாமான்கள், பொருளாதார விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு வந்து சேரும். சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். போன ஜென்மத்தில் உங்கள் துணையாக, காதலன், காதலியாக இருந்தவர்கள் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. வீடு, மனை, வாகனம், சொத்துகள் வாங்குவதற்கான யோகம் உள்ளது.

    Advertisement

    முன்னேற்றம்

    நிறைய தூர தேச பயணங்கள், வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பிரபலமாகக்கூடிய காலகட்டமாக இருக்கும். இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம், குலதெய்வத்தின் அனுக்கிரகம் அற்புதமாக இருக்கும். கும்ப ராசி பெண்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அடுத்த ஒன்றரை மாதத்திற்கு வண்டி, வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும்.

    அனுகூலம்

    கீழே விழுவது, எலும்புகள் உடையும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். திருமணம், காது குத்து என சுப நிகழ்ச்சிகளுக்கு பயணம் செய்து கொண்டே இருப்பீர்கள். சந்தோஷமாக இருக்கக்கூடிய காலகட்டம். நல்ல வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். இதுவரை பார்க்காத சந்தோஷங்களை வரும் நான்கு மாதங்களில் பார்க்கக்கூடிய யோகம் ஏற்படும்.

    Advertisement

    வழிபாடு

    எல்லா பிரச்சனைகளையும் கடந்து நிம்மதியாக வாழக்கூடிய காலகட்டம். டிசம்பர் மாதத்திற்குப் பிறகு 80 சதவீத பிரச்சனைகள் சரியாகும். மே மாதத்திற்குப் பிறகு விடுதலை பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். லட்சுமி நாராயணப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். கல்கண்டு சாதம் செய்து 5 சுமங்கலிக்கு தானமாக கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.

    வெளிநாடு யோகம்

    திருமண யோகம் உண்டு. வேலை போகும் வாய்ப்புள்ளதால் சொந்த தொழில் செய்யும் அமைப்பு உள்ளது. சொத்துக்கள் சேரும். மதிப்பு, மரியாதை கூடும். வெளிநாடு செல்லும் அமைப்பு உள்ளது. ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. புதிய உறவுகளால் ஏற்றம் ஏற்படும். பாக்கியத்தில் சுக்கிரன் புதன் இணைவதால் வாழ்க்கை அழகாக இருக்கும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 90 சதவீதம் முன்னேற்றம் ஏற்படும்.

    English Summary

    Lakshmi Narayana Yogam is expected to bring financial gains, career growth, marriage prospects for Kumbam rasi people.