66 நாட்கள் அட்டகாசமான யோகம்.. மகரம் ராசிக்கு பணம், வேலை, வீடு குவியும் அதிர்ஷ்டம்

  • Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு பல்வேறு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, அடுத்த 66 நாட்களில் பணவரவு, தொழில், வேலை, திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் மகரம் ராசிக்கு என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    அழகு, செளந்தர்யம், சந்தோஷம், காதல் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய கிரகம் சுக்கிரம். இந்த சுக்கிர பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மூல திரிகோணத்தில் இருக்கும் புதன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு, துலாம், புதன் இரு கிரகங்களும் சஞ்சாரம் செய்து டிசம்பர் 6 ஆம் தேதி வரை அமர்ந்து யோகத்தை தரப் போகின்றன.

    Advertisement

    புதனும், சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண வரவு உண்டாகும், திருமண யோகம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு இந்த 66 நாட்கள் அற்புதமாக இருககும். துலாம், சிம்மம், கும்ப ராசிக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். தனுசு, ரிஷபம், சிம்ம ராசிக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் 5 மடங்கு உயர்வு ஏற்படும்.

    அந்த வகையில், இந்த லட்சுமி நரசிம்ம யோகத்தால் மகரம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நல்ல பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    மகரம்

    மகரம் ராசியினருக்கு அற்புதமான யோகம் ஏற்படும். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். கான்டிராக்ட் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு பர்மெனென்ட் ஆன வேலை கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். நிலம், வீடு வாங்கும் யோகம் ஏற்படும். மலைப் பிரதேசங்களில் வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டு. சொந்த ஊரில் நிலம் வாங்குவீர்கள். விவசாயிகளுக்கு நிலத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும்.

    திருமண யோகம்

    உறவினர்களைத் திருமணம் செய்யும் யோகம் ஏற்படும். தொழிலில் பலமடங்கு உயர்வு ஏற்படும். வேலையில் 10 மடங்கு உயர்வு ஏற்படும். உற்பத்தித் துறை, ரியல் எஸ்டேட், எண்ணெய் வளம், ரியல் எஸ்டேட், அரசாங்கம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டம். அடிவயிறு, கழிவுப் பாதை, பின்புறப் பகுதிகளில் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. பயணங்களில் தடைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    தன்னம்பிக்கை

    பயணங்களில் விபத்து நேரிடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அறுவை சிகிச்சைகள் நடைபெறும் வாய்ப்புள்ளது. அடுத்த 4 மாதங்களில் நிறைய மாற்றங்களும், சந்தோஷமும், பொருளாதாரத்தில் நிறைய வளர்ச்சிகளும் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயிக்கக்கூடிய யோகம் ஏற்படும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமைத் திறனுடன் செயல்படுவீர்கள். உங்களை எதிர்க்க ஆளே இல்லாத நிலைமை ஏற்படும்.

    வீடு கட்டும் யோகம்

    புரொபஷனல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். அதே சமயம் குடும்ப வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வது நல்லது. லட்சுமி பூவராக சுவாமியை வழிபாடு செய்வது பெரிய மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும், பிரச்சனைகளை குறைக்கச் செய்யும். திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். வேலை, தொழில் நன்றாக இருக்கும். வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

    Advertisement

    முன்னேற்றம்

    மதிப்பு, மரியாதை, அதிகாரம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். சொந்த ஊரிலேயே வெற்றி பெறுவீர்கள். ஒரு மாதத்துக்கு முயற்சிகளில் தடைபடும். அதற்குப் பிறகு அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். புதிய உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 75 சதவீதம் நன்மைகள் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம்.

    English Summary

    Lakshmi Narayana Yogam is expected to bring financial gains, career growth, marriage prospects for Magaram rasi people.