Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு பல்வேறு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, அடுத்த 66 நாட்களில் பணவரவு, தொழில், வேலை, திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் ரிஷபம் ராசிக்கு என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
அழகு, செளந்தர்யம், சந்தோஷம், காதல் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய கிரகம் சுக்கிரம். இந்த சுக்கிர பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மூல திரிகோணத்தில் இருக்கும் புதன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு, துலாம், புதன் இரு கிரகங்களும் சஞ்சாரம் செய்து டிசம்பர் 6 ஆம் தேதி வரை அமர்ந்து யோகத்தை தரப் போகின்றன.
புதனும், சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண வரவு உண்டாகும், திருமண யோகம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு இந்த 66 நாட்கள் அற்புதமாக இருககும். துலாம், மிதுனம், கும்ப ராசிக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். தனுசு, ரிஷபம், சிம்ம ராசிக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் 5 மடங்கு உயர்வு ஏற்படும். அந்த வகையில், இந்த லட்சுமி நரசிம்ம யோகத்தால் ரிஷப ராசியினருக்கு கிடைக்கப் போகும் நல்ல பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். ரிஷப ராசியினருக்கு செப்டம்பர் 14 முதல் 28 ஆம் தேதி வரை ஆரோக்கியத்தில், பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். காய்ச்சல் வருவது, மருத்துவமனையில் அனுமதியாவது போன்ற வாய்ப்பு ஏற்படும். இருக்கும் வேலையை விட்டு விட்டு புதிய வேலைக்குச் செல்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அமையும். விவாகரத்து வழக்கு போட்டவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடியும். டிசம்பர் மாதத்தில் அனைத்துப் பிரச்சனைகளும் தீரும். புதிய உறவுகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். 8, 10 வருடமாக ஒரே வீட்டில் இருப்பவர்கள் புதிய, ஆடம்பர வீடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டு. சிலருக்கு வாடகை வீட்டையே சொந்தமாக வாங்குவதற்கான யோகம் உண்டாகும். புதிய லோன்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு லோன் கிடைக்கும். கல்வி, வீடு, மனைவி பெயரில், கணவன் பெயரில் என சுப காரியத்துக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் கடன் வாங்கும் அமைப்பு உள்ளது. விரய ஸ்தானத்துக்கு சுக்கிரன், புதன் பார்வை இருப்பதால் ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். இதுவரை இருந்து வந்த கடன்களை எல்லாம் அடைப்பீர்கள். ஒரு கடனை மட்டும் வைத்து நிம்மதி பெறுவீர்கள். நிலத்தில் முதலீடு செய்யும் யோகம் உண்டு. பண்ணை நிலம், பண்ணை வீடுகளை வாங்கி மகிழ்வீர்கள். நிதி, உணவு சார்ந்த வேலை, வியாபாரம், தொழில் அமைவதற்கான பாக்கியம் ஏற்படும். மனைவியை சைலன்ட் பார்ட்னராக வைத்து தொழில் ஆரம்பிக்கும் அமைப்பு உள்ளது. இந்த விஷயம் இப்படித்தான் இருக்க வேண்டும்., இந்தப் பொருள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கொஞ்சம் நச்சரிக்கும் அமைப்பு உள்ளது. மூன்று, நான்கு மாதங்கள் வேலை விஷயமாக பயணம் மேற்கொள்வது, பிரிவது போன்ற அமைப்பு உள்ளது. மனைவியாக இருந்தால் கணவன் ஆரோக்கியத்திலும், கணவராக இருந்தால் மனைவியின் ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு பெரிய மாற்றங்களைத் தரும். இதுவரை கடினமாக இருந்த விஷயங்கள் எளிமையாக முடியும். எதிரிகள் அடங்கிப்போகும் நிலைமை ஏற்படும். பானகம், நீர் போன்றவற்றை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் கொடுப்பது நன்மை தரும். காதலில் கிரீன் சிக்னல் கிடைக்கும். வேலை வாய்ப்பு கிடைக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு. மதிப்பு, மரியாதை, அதிகாரம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். எதிரிகளை எதிர்த்து ஜெயிப்பீர்கள். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 75 சதவீதம் அற்புதமாக இருக்கும்.ரிஷபம்
கடன் தீரும்
வீடு வாங்கும் யோகம்