புதன், சுக்கிரன் அருளால் ஜாக்பாட் அடிக்கும் சிம்ம ராசி.. கால் வைக்கும் இடமெல்லாம் அதிர்ஷ்டம்

  • Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு பல்வேறு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, அடுத்த 66 நாட்களில் பணவரவு, தொழில், வேலை, திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் சிம்மம் ராசிக்கு என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    அழகு, செளந்தர்யம், சந்தோஷம், காதல் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய கிரகம் சுக்கிரம். இந்த சுக்கிர பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மூல திரிகோணத்தில் இருக்கும் புதன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு, துலாம், புதன் இரு கிரகங்களும் சஞ்சாரம் செய்து டிசம்பர் 6 ஆம் தேதி வரை அமர்ந்து யோகத்தை தரப் போகின்றன.

    Advertisement

    புதனும், சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண வரவு உண்டாகும், திருமண யோகம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு இந்த 66 நாட்கள் அற்புதமாக இருககும். துலாம், சிம்மம், கும்ப ராசிக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். தனுசு, ரிஷபம், சிம்ம ராசிக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் 5 மடங்கு உயர்வு ஏற்படும்.

    அந்த வகையில், இந்த லட்சுமி நரசிம்ம யோகத்தால் சிம்மம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நல்ல பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    சிம்மம்

    சிம்மம் ராசியினருக்கு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு சித்ரவதையில் இருந்து வெளியில் வரும் காலகட்டமாக இருக்கும். இந்த 4 மாதங்கள் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். எதற்காகத்தான் வாழ்கிறோமோ என்ற மனநிலையில் இருந்திருப்பீர்கள். நிறைய வேதனைகள், ஏமாற்றம், பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். புதன் பகவான் 3 ஆம் இடத்துக்குச் சென்று சுக்கிரனோடு இணைவதால் அற்புதமான யோகங்கள் ஏற்படும்.

    புதன், சுக்கிரன் அருள்

    அடுத்த 4 மாதங்கள் உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய அற்புதமான மாதமாக இருக்கும். புதன், சுக்கிரன் இருவரும் 3 ஆம் இடத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் தெய்வ அனுக்கிரகம் அற்புதமாக இருக்கும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் ஏற்படும். விற்க முடியாத நிலம், இடங்கள், பூர்வீக சொத்துகளை விற்று பெரும் பணத்தைப் பார்க்கக்கூடிய காலகட்டம்.

    Advertisement

    தொழில்

    மார்க்கெட்டிங், ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இளைய சகோதரிக்கு நல்ல வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல வரன்கள் அமையும். பக்கத்து ஊரில் இருந்து பெண், மாப்பிள்ளை கிடைப்பார்கள். இருசக்க வாகனம், கார் வாங்கக்கூடிய அமைப்பு ஏற்படும்.

    வெற்றி மேல் வெற்றி

    மனம் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியதாக வரும் 4 மாதம் அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். 28 ஆம் தேதி செப்டம்பர் வரைக்கும் பல், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் எடுக்கும் முடிவுகள், திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்த்தாலே எல்லா விஷயங்களும் நிச்சயமாக நடக்கும்.

    Advertisement

    யோகம்

    கண்ணாடி மாற்றுவது, லென்ஸ் வாங்குவது, புதிய பிரேம் போடுவது போன்ற நல்ல அமைப்புகள் ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. உங்கள் வீட்டுக்கு இடதுபுறமாக இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். காதல், திருமணம் கைகூடும். தொழில் நன்றாக அமையும். அப்பார்ட்மென்ட் வாங்கும் அமைப்பு உள்ளது. இடம் விற்பனையாகும்.

    100க்கு 80 மதிப்பெண்

    நல்ல பெயர் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பேச்சினால் எதிரிகள் உருவாகும் வாய்ப்புள்ளதால் பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. புதிய உறவுகள் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதமும் நன்றாக இருக்கும்.

    English Summary

    Lakshmi Narayana Yogam is expected to bring financial gains, career growth, marriage prospects for simmam rasi people.