ஜாக்பாட் அடிக்கும் துலாம் ராசி.. சுக்கிரன், புதன் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்

  • Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு பல்வேறு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, அடுத்த 66 நாட்களில் பணவரவு, தொழில், வேலை, திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் துலாம் ராசிக்கு என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    அழகு, செளந்தர்யம், சந்தோஷம், காதல் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய கிரகம் சுக்கிரம். இந்த சுக்கிர பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மூல திரிகோணத்தில் இருக்கும் புதன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு, துலாம், புதன் இரு கிரகங்களும் சஞ்சாரம் செய்து டிசம்பர் 6 ஆம் தேதி வரை அமர்ந்து யோகத்தை தரப் போகின்றன.

    Advertisement

    புதனும், சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண வரவு உண்டாகும், திருமண யோகம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு இந்த 66 நாட்கள் அற்புதமாக இருககும். துலாம், சிம்மம், கும்ப ராசிக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். தனுசு, ரிஷபம், சிம்ம ராசிக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் 5 மடங்கு உயர்வு ஏற்படும்.

    அந்த வகையில், இந்த லட்சுமி நரசிம்ம யோகத்தால் துலாம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நல்ல பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    துலாம்

    துலாம் ராசியினருக்கு அருமையாக சம்பாதிக்க கூடிய மாதமாக இந்த 4 மாதம் அமையும். சுக்கிரனும், புதனும் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய பணங்கள் வந்து சேரும். புகழ், கெளரவம், மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய முயற்சிகளைச் செய்து வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். பரிசு, தானங்கள் வந்து சேரும். வெளிமாவட்டம், மாநிலம், வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். யூரோப் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

    சொத்து சேரும்

    சொத்துகள் சேரும். காட்டேஜ் வாங்குவது, குளிர்பிரதேசத்தில் வீடு வாங்குவது போன்ற அமைப்புகள் உண்டாகும். நல்ல மணமகள் அமைவார்கள். காதல் திருமணம் ஏற்படும். உங்கள் மனைவிக்கு அருமையான யோகம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் கணவருக்கு அற்புதமான ஏற்றம் ஏற்படும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். அடுத்த 4 மாதத்துக்கு ரசனையான, சுவையான உணவுகளை தேடிச் சென்று சாப்பிடுவீர்கள்.

    Advertisement

    யோகம்

    உடம்பு கட்டுக்கோப்பாக மாறும். ஜிம்முக்கு செல்வது, டயட் இருப்பது போன்ற அமைப்பு உள்ளது. சுக்கிரன் வருவது, வக்கிரமாவது, வக்கிர நிவர்த்தியாவது, அதிசாரமாவது என அனைத்து விஷயங்களும் துலாம் ராசியிலேயே நடைபெறுகிறது. இதில், புதனும் இணைவதால் லட்சுமி நாராயண யோகம் உருவாவதால் அறிவுக்கூர்மை, புத்திசாலித்தனம், ஞானம் என எல்லாவற்றையும் தரப் போகிறார். கேட்பதற்கு முன்பே 100க்கு 100 நன்மைகளைத் தருவார்கள்.

    வழிபாடு

    கால் பாதம், பின்புற பகுதியில் வலி வருவதற்கான வாய்ப்புள்ளது. யாரிடமாவது கடன் கொடுத்திருந்தால் திருப்பி வசூல் செய்வதில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய நன்மைகள் நடக்கும். பெயர், பணம், புகழ் கிடைக்கும் அமைப்பு. வீட்டில் மகிழ்ச்சி பெருகும். காதல் வாழ்க்கை இனிக்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு பெரிய மாற்றத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கும்.

    Advertisement

    100க்கு 95 மார்க்

    காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண யோகம் ஏற்படும். தொழில், வேலையில் ஏற்றம் ஏற்படும். வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பணம், மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு வாய்ப்பு ஏற்படும். 30 நாட்களுக்கு எதிரிகள் தொல்லை ஏற்படும். அதற்குப் பிறகு அற்புதமான ஏற்றம் ஏற்படும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 95 சதவீதம் ஏற்றம் ஏற்படும்.

    English Summary

    Lakshmi Narayana Yogam is expected to bring financial gains, career growth, marriage prospects for Thulam rasi people.