Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம்


  • ஜூன் மாத பலன்கள்: 2026 ஜூன் மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவது இயல்பான நிகழ்வாகும். இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு சவால்களையும் அளிக்கும்.

    Advertisement

    இந்த மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாக குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல ராசியினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் செயல் வேகம் மற்றும் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறார். 2026 ஜூன் மாதம் பல புதிய வாய்ப்புகளையும் முக்கிய மாற்றங்களையும் கொண்டு வரக்கூடிய மாதமாக அமைகிறது.

    தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண யோகம் போன்ற விஷயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படலாம். அதே நேரத்தில் சில விஷயங்களில் பொறுமையும் நிதானமும் அவசியமாக இருக்கும். இந்த மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய அம்சங்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    மகரம்

    மகர ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 7 ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்த உங்களுக்கு இந்த ஜூன் மாதம் உங்களுக்கு நல்ல மாற்றங்களைத் தரும். போன மாத தொடக்கத்தில் இருந்தே நல்ல மாற்றங்கள், நண்பர்கள், உறவினர்கள் மூலமாக நல்ல செய்திகள் வந்திருக்கும். மே மாதம் சில உயர்வுகள் வந்திருக்கலாம். நீண்ட கால கனவுகள் பழிக்கும் காலகட்டமாக இருக்கும்.

    உச்சகுரு

    நிறைய நன்மைகள் உண்டாகும். உச்சகுரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் யோகம் பெறும் நேரம் இது. தன்னம்பிக்கை, தைரியம் அதிகமாக இருக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். நன்றாக சம்பாதிக்க ஆரம்பிப்பீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எல்லா பிரச்சனைகளும் தீரக்கூடிய நல்ல மாற்றங்கள் ஏற்படும். பெரிய அளவில் நம்பிக்கை ஏற்படும்.

    Advertisement

    நன்மைகள்

    அதிர்ஷ்டம் தரும் நல்ல காலகட்டம். நிறைய நன்மைகள் நடக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவுகள் மேன்மை அடையும். காதலிப்பவர்களுக்கு காதல் திருமணத்தில் முடியும் அமைப்பு உள்ளது. வேற்று மொழி, மத பேசுபவர்களை காதலித்தாலும் குடும்பத்தில் கிரீன் சிக்னல் கிடைக்கக்கூடிய யோகமான அமைப்பு உள்ளது.

    திருப்புமுனை

    60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அற்புதமான திருப்புமுனை ஏற்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தொழில் முனைவோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். கடை விரிவாக்கம் செய்யும் யோகம் உண்டு. புதிய கிளையைத் தொடங்குவீர்கள். வீடு கட்ட ஆரம்பிப்பது, தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டு.

    Advertisement

    தொழில் தொடங்கும் யோகம்

    வேலையை விட்டு விடலாமா என்று யோசிப்பவர்கள் தாராளமாக விட்டு விட்டு தொழில் தொடங்கலாம். வாகன யோகம் சிறப்பாக இருக்கும். எந்த இடத்தில் மரியாதை கிடைக்கவில்லை, மதிப்பு போய்விட்டது என்று நினைத்தீர்களோ, அவமானப்பட்டீர்களோ அந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். இரட்டிப்பான நன்மைகள் கிடைக்கும் காலகட்டம். சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அதனை சமாளித்து முன்னேறக்கூடிய காலகட்டம்.

    English Summary

    Magaram June Month Rasi Palan: In this post, we will explore the benefits, remedial measures, career advancement, financial progress, marriage prospects, and deities to be worshipped for individuals born under the Magaram zodiac sign during the month of June 2026.