Rasi Palan This Week: மகரம் ராசிக்கு பணத்தை அள்ளி கொடுக்கும் சுக்கிரன் குரு..அதிர்ஷ்டம் கொட்ட போகுது


  • Magaram Rasi Palan: மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

    அந்த வகையில், மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)

    மகர ராசியினருக்கு துணை விஷயத்தில் கோபப்படாமல் இருப்பது நன்மையைத் தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிகரிக்கும் காலகட்டம். கணவராக இருந்தால் மனைவியின் உடல்நிலை, மனைவியாக இருந்தால் கணவரின் உடல்நிலையை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தடைகள் நீங்கும்

    நரம்பு, தலைவலி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. விநாயகர், துர்க்கை வழிபாடு நிம்மதியை ஏற்படுத்தும். தடைகளை தவிடு பொடியாக்கும். அபிராமி அந்தாதியில் 40, 59, 75 ஆவது பாடல்களை படிப்பது, கேட்பது குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும், பணப் பற்றாக்குறையையும் போக்கும். தனிப்பட்ட யோக பலன்களைத் தரக்கூடிய நல்ல காலகட்டம்.

    Advertisement

    அனுகூலம்

    4 ஆம் இடத்தில் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருக்கிறது. வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, கிரகப் பிரவேஷம் செய்வது, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் நடப்பது, பதவி உயர்வு பெறும் யோகம் உண்டாகும். மகனின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். மகனிடம் சண்டை ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை முதல் மகனுக்கு வரும். சிலருக்கு பின்புறப் பகுதியில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    சுக்கிரன் குரு அருள்

    சுக்கிரன் குரு இணைந்திருப்பதால் பண வரவு அபரிமிதமாக இருக்கம். லோனுக்கு அப்ளை செய்தால் கிடைக்கும். முதலீடுகளில் அனுகூலம் ஏற்படும். இன்டீரியர் டெக்கரேட் செய்வது, மேல் வீடு கட்டுவது போன்ற அமைப்பு உள்ளது. உடன் வேலை செய்யும் எதிர்பாலினத்தவரிடம் கவனமாக இருக்க வேண்டும். நம்பிக்கை, விசுவாசம் இருந்தாலும் ஓரளவுக்கு உதவி செய்வது நல்லது.

    Advertisement

    ஆரோக்கியம்

    அடிவயிறு, கழிவுப் பாதை செய்யக்கூடிய பாதையில் பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தொழில் ரீதியாக நீண்ட நாட்களாக இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். யோக பலத்தைப் பெற்றுத் தரும். தடைபட்டு வந்த காரியங்கள் இனி நன்றாக நடக்கும். சந்தோஷம், பொருளாதார ஏற்றம் 70 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Magaram Rasi Palan: This week may bring positive progress and financial improvement for Magaram rasi people. Family support, career growth, and new opportunities may increase happiness and confidence. Patience, spiritual activities, and avoiding unnecessary stress will help maintain peace and success throughout the week.