Magaram: மகரம் ராசிக்கு இனி எல்லாமே ஜெயம்.. இழந்த பணம் திரும்பும், அதிர்ஷ்டம் தேடி வரும்

  • ஆவணி மாத பலன்கள்: சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய இந்த ஆவணி மாதத்தில் மகரம் ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்கள், நல்ல பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    சூரியன் சிம்ம வீட்டிற்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். இந்த ஆவணி மாதத்தில் செவ்வாய் புதனுடைய வீட்டில் உபஜய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் உச்சமாகி கடக வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதன் சிம்ம வீட்டிற்கு வருகிறார். சூரியன் புதன், கேது இமைவு ஏற்படுகிறது. 6 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் வலுவிழந்து இருக்கிறார்.

    Advertisement

    சனி வக்கிரமாகி மீன ராசியில் இருக்கிறார். சந்திரன் தன்னுடைய பயணத்தை மீன வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த ஆவணி மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    மகர ராசி பலன்

    மகர ராசிகளுக்கு உயர்வான மாதமாக இந்த ஆவணி மாதம் இருக்கும். 6 இல் செவ்வாய், 7 இல் குரு, 8 இல் சூரியன், 9 ஆம் இடத்தில் பாக்கியாதிபதி உச்சம். 10 ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி. ஆவணி மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு அற்புதமான யோகங்களைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். எதிர்பாராத சந்திப்பு, எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும்.

    Advertisement

    இழந்த பணம் வரும்

    கடந்த காலத்தில் பங்குச் சந்தையில் பணத்தை இழந்தவர்கள் இந்த மாதம் பணத்தை மீண்டும் பெறக்கூடிய மாதமாக இருக்கும். ஆன்லைன் மோசடிகளில் சிக்கி ஏமாந்து போனவர்களுக்கு ஏமாந்துபோன் பணத்தை மீட்டெடுக்கும் அமைப்பு உள்ளது. வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பாம்பே, பூனே, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பகுதிகளில் வேலைவாய்ப்பு பெறுவது, அதற்கான ஆர்டர்களைப் பெறுவது போன்ற அமைப்பு உள்ளது.

    பாக்கியம்

    இரட்டிப்பு சம்பளம் பெறும் யோகம் உண்டாகும். நிறைய பாக்கியங்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிலும் கூடுதல் நிறைவுடன் இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற அமைப்புகள் நன்றாக இருக்கும். டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    வாகனத்தில் ஜாக்பாட்

    10 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள், லாரி, பஸ் டிரான்ஸ்போர்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். நல்லவை நிறைய நடக்கக்கூடிய மாதமாக இருக்கும். 6 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான யோகம் உண்டாகும். அதற்கான நம்பிக்கையும், வருமானமும் ஏற்படும்.

    எதிரிகள்

    எதிரிகளை அடையாளம் காட்டக்கூடிய மாதமாக இந்த மாதம் அமையும். ராசியையும், ராசிநாதனையும் உச்சகுரு பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். குலதெய்வ வழிபாடு, மகான்கள் வழிபாடு சகலவித நன்மைகளையும் தரும்.

    English Summary

    Magaram Rasi Palan: Magaram rasi people may see financial growth, marriage prospects, new opportunities and increased luck during the Avani month.