Weekly Rasi Palan: ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
ஆனி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். அந்த வகையில், ஜூலை 6 முதல் ஜூலை 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மீன ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அருமையான காலகட்டம். பஞ்சமத்தில் இருக்கும் குரு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுப்பார். திட்டமிட்ட காரியங்களில் வெற்றிகள் ஏற்படும். இயற்கையாகவே சில விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். எதற்காகவும் மற்றவர்களுக்காக கவலைப்படத் தேவையில்லை. முன்னேற்றத்திற்கான பாதையாக இருக்கும். நம்பிக்கை நிறைந்த காலகட்டமாக இருக்கும். புதிய அறிமுகங்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படுத்திக் கொடுக்கும். உறவுமுறையில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எல்லா விதத்திலும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். அடிவயிறு, முதுகு, கழிவுப் பாதையில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் கைகளில் பாதிப்பு, கண், காது, மூக்கு, தொண்டை பாதிப்புகள் வருவதற்கான அமைப்பு உள்ளது. பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் குரு குழந்தை பாக்கியம், திருமண பாக்கியத்தைக் கொடுக்கும். பெரிய நபர்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். நினைத்த காரியங்கள் நடத்தி முடிக்கும் அமைப்பு உள்ளது. ரத்த பந்த உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம், பழக்கவழக்கங்கள் வண்டி வாகனத்தில் கவனமாக இருக்க வேண்டும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினருக்கு ஏற்றம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். பெரிய அளவுக்கு முன்னேற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். தெய்வ சக்தி, தெய்வ அனுக்கிரகம் இருப்பதால் அற்புதமான நேரம் உள்ளது. கோபத்தை தவிர்த்து நிதானமாக முடிவெடுப்பது நல்லது. நாராயணன் வழிபாடு சகலவித நன்மைகளைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.மீனம் ராசி பலன்
முன்னேற்றம்
குழந்தை பாக்கியம்
தொழில்
வழிபாடு