ஆட்டத்தை ஆரம்பிக்கும் மீன ராசி.. சுக்கிர பகவான் அருளால் வரப்போகும் மிகப்பெரிய அதிர்ஷ்டம்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 3 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 3 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மீனம் ராசி பலன்

    மீனம் ராசியினருக்கு தெய்வத்தின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். குரு, புதனின் இணைவு உங்களுக்கு ஐஸ்வர்யா யோகத்தைக் கொடுக்கும். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். கோயில், பூஜை, புனஸ்காரம், தெய்வபக்தி மூலம் ஆதாயமும், அனுகூலமும் உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். திட்டமிட்ட விஷயங்கள் அற்புதமாக நடக்கும்.

    Advertisement

    ஏற்றம்

    7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரனால் அற்புதமான ஏற்றங்கள் கிடைக்கும். நிறைய பேருக்கு பொருளாதாரத்தில், ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். எந்த விஷயங்களை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்வது நல்லது. மருந்து, மாத்திரை செலவு அதிகரிக்கும்.

    அதிர்ஷ்டம்

    குரு, புதனின் அருள் இருப்பதால் அதிர்ஷ்டம் ஏற்படும். பண வரவு அபரிமிதமாக இருக்கும். சொத்துகளை விற்று வரும் பணம் கிடைக்கும். நிலம், வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    Advertisement

    முன்னேற்றம்

    உறவுகள் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். அதிகமாக நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும். மீனம் உள்ள வீட்டில் நிறைய சுப காரியங்கள் நடக்கும். ஏற்றமும், நம்பிக்கையும், அனுகூலமும் உண்டாகக்கூடிய காலகட்டம். உறவுகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்து விஷயங்களில் தகராறு வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும்.

    வழிபாடு

    குரு பகவான் உச்சமாக இருப்பதால் ரத்த அழுத்தம், கொழுப்பு போன்றவற்றை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 24 வயதைக் கடந்தவர்கள் உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும். ராமேஷ்வரத்தில் உள்ள ராமர் பாதத்தை வணங்குவது சகலவித முன்னேற்றத்தைத் தரும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Meenam rasi people during this week of August 19 to 23.